பயங்கரவாதத்தை ஈரான் ஆதரிப்பது, வெட்டவெளிச்சமாகியுள்ளது - சவுதி அரேபியா கண்டனம்
பயங்கரவாத தொடர்பு உள்ளவர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளதன் மூலம், ஈரான், பயங்கரவாதத்தை ஆதரிப்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது' என, சவுதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவில் ஷியா பிரிவு மதகுரு ஷேக் நிமர் அல்நிமர் உள்ளிட்ட, 47 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது; இது பல்வேறு நாடுகளில் வாழும் ஷியா பிரிவு இடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷியா பிரிவினர் அதிகம் வாழும் ஈரான் நாடும், கண்டனத்தை பதிவு செய்து இருந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சவுதி அரேபிய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'ஈரானின் செயல், தீவிரவாதிகளுக்கு ஆதரவு அளிப்பதை உறுதி செய்துள்ளது; இந்த பிராந்தியத்தில் குற்றச்செயல்களுக்கு துணை போவதுபோல அமைந்துள்ளது' என, தெரிவித்துள்ளது.
Of course,the comment of Mr.mohammed Rashid's is perfectly correct.thus i agree with him.All grave worshipers should rejected by thawheed people.May Allah grant the clear and proper wise to present king of Saudi Salman bin abdul azeez
ReplyDelete