Header Ads



தம்புள்ளை பள்ளிவாசலுக்கு அருகிலிருப்பவர்கள், தற்போதைக்கு வௌியேற வேண்டியதில்லை

-ARA.Fareel-

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கு அரு­கா­மையில் வசித்து வரும் மக்கள் தமக்குத் தேவை­யான காணி அர­சாங்­கத்­தினால் வழங்­கப்­படும் வரை அவ்­வி­டத்­தி­லி­ருந்து வெளி­யேற வேண்­டா­மென அஸ்­கி­ரிய மகா­நா­யக்க தேரர் கல­கம ஸ்ரீ ஹத்­த­திஸ்ஸ அம்­மக்­க­ளிடம் வேண்­டுகோள் விடுத்­துள்ளார்.

அஸ்­கி­ரிய பீடா­தி­பதி கல­கம ஸ்ரீ ஹத்­த­திஸ்ஸ தேரர் தம்­புள்ளை மெத­வி­கா­ரைக்கு விஜ­ய­மொன்­றினை மேற்­கொண்­டி­ருந்தார். அங்கு தேரரை தம்­புள்­ளையில் காணி இழந்தோர் சங்கத் தலைவர் மஞ்­சுள தயா­னந்த உட்­பட காணி இழந்தோர் சிலர் சந்­தித்து கலந்­து­ரை­யா­டினர்.

குறிப்­பிட்ட கலந்­து­ரை­யா­டலின் போதே குழு­வி­ன­ரிடம் இவ்­வாறு தேரர் வேண்­டுகோள் விடுத்தார். கலந்­து­ரை­யா­டலின் போது மகா­நா­யக்க தேரர் மேலும் குறிப்­பிட்­ட­தா­வது, நீண்­ட­ கா­ல­மாகக் குடி­யி­ருக்கும் உங்­களை நினைத்­த­வாறு அவ்­வி­டத்­தி­லி­ருந்து அக­லு­மாறு கட்­ட­ளை­யிட முடி­யாது.

தேவை­யான காணி இனம் காணப்­பட்ட பின்பே அவ்­வாறு கோரிக்கை விடுக்க முடியும். நான் பத­வியில் இருக்கும் வரை உங்­களை எவ­ராலும் நினைத்­த­வாறு அப்­பு­றப்­ப­டுத்த முடி­யாது. இது தொடர்­பாக நான் ஜனா­தி­ப­தி­யுடன் பேச்­சு­வார்த்தை நடாத்­த­வுள்ளேன் என்றார்.

தம்­புள்ளை ஹைரியா பள்­ளி­வா­ச­லுக்கும் பள்­ளி­வாசல் பிர­தே­சத்தில் தற்­போது குடி­யி­ருக்கும் குடும்­பங்­க­ளுக்கும் அப்­பி­ர­தே­சத்­தி­லி­ருந்து வெளி­யேற்­றப்­பட்­டுள்ள குடும்­பங்­க­ளுக்கும் தம்­புள்ளை பொல்­வத்­தயில் காணிகள் வழங்­கு­வ­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­க­தாகும்.

கடந்த வாரம் 107 குடும்­பங்­களில் 86 குடும்­பங்கள் நஷ்ட ஈடு வழங்­கு­வ­தற்­காக தம்­புள்ளை பிர­தேச செய­லாளர் காரி­யா­ல­யத்­திற்கு அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

இவர்­களில் 3 குடும்­பங்­களே நஷ்ட ஈட்டுத் தொகை­யாக தலா 2 இலட்சம் ரூபாவைப் பெற்­றுக்­கொண்­டன. ஏனைய குடும்­பங்கள் தமக்­கான காணியை இனம் காட்­டாமல் நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்றுக் கொள்ளமாட்டோம் என்று நிரா­க­ரித்­தனர்.

நஷ்ட ஈட்டுத் தொகையைப் பெற்­றுக்­கொண்ட 3 குடும்­பங்­களில் ஒரு குடும்பம் நஷ்ட ஈட்டுத் தொகையை திருப்பி சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கையளித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையிலே தம்புள்ளை மெதவிகாரைக்கு விஜயம் செய்த அஸ்கிரிய பீடாதிபதியை பாதிக்கப்பட்டுள்ள மக்கள் சந்தித்துள்ளனர்.

1 comment:

  1. சூழ்ச்சி காரர்களை விட பெரிய சூழ்ச்சி காரன் மேலே இருந்து செயல் படுகிறான்.

    ReplyDelete

Powered by Blogger.