Header Ads



நடுவுல ஓரு பக்கம் காணாமல் போன போராளிகளும், பசீர் சேகுதாவூத் சொன்ன இரகசியமும்...!

-Abdul Waji-

அண்மையில் மறைந்த மூத்த அரசியல்வாதி மர்ஹூம் மசூர் மெளலானா அவர்களுக்காக ஓர் இரங்கல் கூட்டம் ஏறாவூர் வாவிக்கரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஏற்பாடு செய்தவர் முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தவிசாளர் பசீர்  சேகுதாவூத் ஆவார்.

இங்கு உரையாற்றிய தவிசாளர் இன்று தான் ஓர் இரகசியத்தை வெளியிடப் போவதாகச் சொல்லி ஓர் தகவலைச் சொல்லியிருநதார்.

அதன் சுருக்கம் வருமாறு;

"கடந்த 2002ம் ஆண்டு ரஊப் ஹக்கீம் ஓஸ்லோவில் பேச்சு வார்த்தையில் கலந்து கொண்டிருந்த நேரம். ஓர் நாள் காலை மசூர் மெளலானா ஓர் தகவலைச் சொன்னார். அப்போதைய தவிசாளர் அதாவுல்லாஹ் அன்றைய செயலாளர் ஹப்ரத் மூலம்  கட்சியின் அதியுயர் பீடத்தைக் கூட்டி, ஹக்கீமை தலைமப் பதவியிலிருந்து நீக்க முயற்சி செய்கிறார். என்பதே அந்தத் தகவலாகும்."

"உடனே நான் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு இராணுவ பாணியில் களமிறங்கினேன். அன்று மாலை நூறு பேரைத் திரட்டிக் கொண்டு தாருஸ்ஸலாம் (மு.கா ஹெட் குவார்டஸ்) வருமாறு புத்தளம் பாயிஸுக்கு கட்டளையிட்டேன். அன்று மாலை தாருஸ்ஸலாம் வந்த அதாவுல்லாஹ் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதாவுல்லாஹ் கூட்டம் கூட்ட முடியாமல் தப்பியோடினார். அன்று மட்டும் அந்தக் கூட்டம் நடந்திருந்தால், இன்று ரவூப் ஹக்கீம் கட்சிக்குத் தலைவராக இருந்திருக்க முடியாது. இந்த இரகசியம் தன்னையும் மசூர் மெளலானாவையும் தவிர வேறு எவருக்கும் தெரியாது."

இதுதான் அவர் சொன்ன இரகசியம். 

இது கேட்ட போராளிகளுக்கு ஏதோ தமிழ் சினிமாவில் விஜயகாந் பயங்கரவாதிகளிடமிருந்து தமிழ் நாட்டைக் காப்பாற்றியது போல ஓர் பரவசம் வந்து போயிருக்கலாம்.

உண்மையில் என்ன நடந்ததென்றால்.....

அதாவுல்லாஹ் மீது கெரில்லா கல் வீச்சுத் தாக்குதல் நடாத்தப்பட்டதும், அவர் தாருஸ்ஸலாமில் கூட்டம் நடாத்த முடியாமல் போனது என்பதும் உண்மைதான். அதனால்தான் ஹக்கீமின் தலைமைப் பதவி காப்பாற்றப்பட்டது என்பது பச்சைப் பொய். 

அன்றைய தினம் அதாவுல்லாஹ் தரப்பு திட்டமிட்டபடி கூட்டத்தை நடாத்தி முடித்தது. கூட்டம் நடந்த இடம் கலதாரி ஹோட்டல். இவர்களின் இராணுவ பாணியிலான கல் வீச்சுத் தாக்குதலை சமாளிக்க முடியாத அதாவுல்லாஹ் தரப்பு கலதாரி ஹோட்டலில் கூடி ரவூப் ஹக்கீமைப் பதவி நீக்கம் செய்தது.

முடிவு, கட்சி நீதிமன்றம் கொண்டு வரப்பட்டது.

இப்போது கட்சிக்கு யார் தலைவர் ? ரவூப் ஹக்கீமா? அதாவுல்லாஹ்வா என்பதை நீதிபதி சொல்ல வேண்டும்.

இதைத் தீர்மானிப்பதற்கு பின்வரும் கோணத்தில் விவாதங்கள் முன்வைக்கப்பட்டன.

ரவூப் ஹக்கீமை அதாவுல்லாஹ் பதவி நீக்கியமை, அதாவுல்லாஹ்வை ரவூப் ஹக்கீம் பதவி நீக்கியமை இதில் எது சட்ட ரீதியானது?(அதாவுல்லாஹ் கூட்டிய கூட்டத்துக்கு முன்னதாகவே அவரை ரவூப் ஹக்கீம் ஓஸ்லோவில் இருந்தவாறே தொலை நகல் (Fax) தகவல் மூலம் பதவி நீக்கம் செய்து விட்டதாக ஓர் ஆவணம் ஹக்கீமின் உதவியாளர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.)

இவற்றின் அடிப்படையில் அதாவுல்லாஹ் கூட்டம் கூட்டுவதற்கு முன்பாகவே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டு விட்டதால் அவர் தலைமை தாங்கிய கூட்டமும், அதில் ஹக்கீமை நீக்க எடுத்த தீர்மானங்களும் செல்லுபடியாகாது என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

 அதாவுல்லாஹ் தரப்பு சார்பாக தற்போதைய நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவும், ஹக்கீம் தரப்பு சார்பாக தற்போதைய தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி கலாநிதி ஜயம்பதி விக்ரம ரத்னவும் வாதங்களை முன்வைத்தனர்.

இதுதான் அன்று நடந்தது. 

2 comments:

  1. எது எப்படியிருந்தாலும் ஒரு தலைவர் நாட்டை விட்டு வெழியில் சென்ருள்ளபோது இவ்வாரான கீழ்தரமான சிந்தனையும் முடிவும் எடுப்பது அந்தகட்சியை சார்ந்தவர்கலுக்கு விழித்திருக்கும் போது கண்னை தோன்டுவதுபோல்தானே ஆகும் இப்படியானவர்கள்தானா மரைந்த தலைவரின் மரணத்தைப்பற்ரீ தோன்டுவார்கள் எப்போது மரம் விழும் அதன் கணீயை சுவைக்கவென காத்திருந்ததுபோல்தான் உள்ளது இந்தபடைவீரர்கலின் கதைகள்

    ReplyDelete
  2. He is trying to say this hidden drama to get national list MP again

    ReplyDelete

Powered by Blogger.