காத்தான்குடி உமர் பாலர் பாடசாலைக்கு உதவி
மிகுந்த சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் காத்தான்குடி உமர் பாலர் பாடசாலையின் நிலைமையினை NFGG தவிசாளர் பொறுயியலாளர் அப்துர் ரஹ்மான் நேற்று நேரில் சென்று பார்வையிட்டதோடு இம் மாணவர்களுக்கு புத்தகப்பைகளையும் அவர் வழங்கி வைத்தார்.
காத்தான்குடியில் பின்தங்கிய கரையோர பிரதேசங்களில் ஒன்றான அப்ரார் கிராமத்தில் பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் இயங்கி வரும் இந்த பாலர் பாடசாலையின் நிர்வாகத்தினரோடும் ஆசிரியைகளோடும் அப்துர் ரஹ்மான் நேரில் கலந்துரையாடியதோடு அப் பாடசாலையில் கல்வி கற்கும் 24 மாணவர்களின் நிலை விவரங்களையும் கேட்டறிந்து கொண்டார். அத்தோடு அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர்கள் சிலரையும் நேரில் சந்தித்தார்.
அப்ரார் பிரதேச மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும் வகையில் அப்பிரதேசத்தில் கல்வி மையம் ஒன்றினை சில வருடங்களுக்கு முன்னர் NFGG அமைத்துக் கொடுத்திருந்தது. பாலர் பாடசாலையினை நடாத்துவதற்கான இடவசதியின்றி அதனை மூடிவிடுவதற்கான முடிவினை எடுக்க வேண்டிய நிலையில் உமர் பாலர் பாடசாலை நிர்வாகிகள் இருந்த வேளையில் NFGG அவர்களுக்கு கைகொடுத்திருந்தது.அந்த வகையில் குறித்த பாலர் பாடசாலை கடந்த நான்கு வருடங்களுக்கும் மேலாக NFGG கல்வி மையத்திலேயே இயங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்றைய விஜயத்தின் போது இம் மாணவர்களுக்கு புத்தகப்பைகளையும் அப்துர் ரஹ்மான் வழங்கி வைத்ததோடு இம் மாணவர்களுக்கான சீருடைகளை இலவசமாக வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்யும் பொருட்டு அதற்கான முதற்கட்ட நிதியுதவிகளையும் உமர் பாலர் பாடசாலை நிர்வாகத்திடம் நேற்றுக் கையளித்தார்.
இப்பாலர் பாடசாலையின் முன்னேற்றத்திற்காக தம்மாலான முழு உதவிகளையும் NFGG வழங்கும் எனவும் அவர் உறுதியளித்தார்.
Post a Comment