Header Ads



கொழும்பில் இந்தியாவின் விமானம் தாங்கிக் கப்பல் - அமைச்சர்களும் சென்று பார்வை

கொழும்புத் துறைமுகத்திற்கு முதல் தடவையாக வருகைதந்துள்ள இந்தியாவின் யுத்தக் கப்பலான ”விக்கிரமாதித்யா”என்ற கப்பலை வெளிவிகார அமைச்சர் மங்கள சமரவீர, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன உள்ளிட்டவர்கள் பார்வையிட்டுள்ளனர்.

குறித்த கப்பல் நேற்றைய தினம் இலங்கை கடற்படையினரின் அமோக வரவேற்புடன்  கொழும்பு துறைமுகத்திற்கு வருகைதந்தது.

இந்த நிலையில், கப்பலின் பிரதான கட்டளை அதிகாரியான ரவினிட்சிங்கால் அமைச்சர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புதிய தொழிநுட்பத்துடனான இந்த கப்பலை சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில் நிலவும் நீண்ட கால உறவை வளர்ப்பதற்கும், பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும் இந்த கப்பலின் வருகை முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமைந்துள்ளது என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மற்றும் பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன ஆகியோர் கப்பலை பார்வையயிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளனர்.

இந்த நிகழ்வில் இலங்கையின் இந்தியாவிற்கான தூதுவர் வை.சிங்ஹா உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்துக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, குறித்த கட்டளை அதிகாரியின் கீழ் வெளிநாடுகளுக்கு ”விக்கிரமாதித்யா” கப்பல் சுற்றுப்பயணம் செல்லும் முதல் சந்தர்ப்பம் இதுவென்பதும் குறிப்பிடத்தக்கது.


No comments

Powered by Blogger.