Header Ads



மாணவர்களுக்கு றிசாத் + ஹக்கீம் வாழ்த்து

நடைபெற்று முடிந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப்பரீட்சையில் தேசிய மட்டத்தில் உயிரியல் விஞ்ஞான பிரிவில் 2 வது இடத்தை பெற்ற புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான பிரிவு மாணவன் முஹம்மத் முன்சிபுக்கு அகில இலங்கை மக்கள் கஙா்கிரஸின் தேசிய தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் தமது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தமது அமைச்சின் இணைப்பு செயலாளர் ஊடாக அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது-

புத்தளத்தின் எதிர்பார்ப்புக்களை பெற்றுக்கொடுப்பதில் என்றும் நான் முதன்மையானவன் என்ற வகையில் இந்த மாணவன் பெற்றுக் கொடுத்துள்ள பெறுபேறு என்பது எமது சிறுபான்மை சமூகத்திற்கு ஒரு வரப்பிரசாதமாகும்.

கற்றறல் செயற்பாடுகள் என்பது மாணவனின் முயற்சியில் மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களின் பங்களிப்பிலும் தங்கியுள்ளது. அதளை இந்த மாணவனின் பெற்றோர்கள் எடுத்துரைத்துள்ளார்கள் என்பதற்கு இதனை ஒரு உதாரணமாக கொள்ளலாம் .

புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லுாரி மாணவன் முஹம்மத் முன்சிபின் இந்த முயற்சி தொடர்பில் தான் மகிழ்வுறுவதாகவும்,எதிர்காலத்தில் இ்ந்த நாடு எதிர்பார்க்கும் துறைசாந்தவராக அவர் வரவேண்டும் என்றும் தாம் பிரார்த்திப்பதாகவும்,பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பிரதேச அரசியல் தலைவர்கள் ஆகியோரின் தொடராத ஒத்தழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவிப்பதாகவும் அமைச்சர் றிசாத் பதியுதீன் அனுப்பி வைத்துள்ள அந்த கடிதத்தில் குறி்ப்பிட்டுள்ளார்.

2

வரலாற்றில் பெயர் பதித்த பலர் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து அதிலிருந்து படிப்பினை பெற்று முன்னேறியவர்கள் என்பதை மனதில் நிறுத்தி முயற்சிக்க வேண்டும் - அமைச்சர் ஹக்கீம்

இன்று வெளியான கா.பொ.த. உயர்தர பரீட்சையில் சித்தியடைந்து பாடசாலை, பெற்றோர் மற்றும் சமூகத்திற்கு பெருமை சேர்த்துள்ள மாணவ மாணவிகளுக்கும் அவர்களுக்கு கல்வி புகட்டிய ஆசான்கள், அதிபர்கள், பெற்றோர் மற்றும் பாடசாலை சமூகத்தினர் அனைவருக்கும் தனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவிப்பதாக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அவரது வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது, நான் கல்வி கற்ற கொழும்பு ரோயல் கல்லூரியில் தசுன் ஜெயசிங்க என்ற மாணவன் கணித பிரிவில் அகில இலங்கை ரீதியில் முதலிடம் பெற்றுள்ளதையிட்டு பெருமகிழ்சியடைகிறேன்.

வர்த்தகப் பிரிவில் குறுநாகல் மலியதேவ ஆண்கள் வித்தியாலய மாணவன் அகில் மொஹமட் முதலிடத்தையும் கலைப்பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலயத்தின் மாணவி ஜீவா நயனமாலி முதலிடத்தையும் விஞ்ஞானப் பிரிவில் கம்பஹா ரத்னாவலி பாலிகா வித்தியாலய மாணவி உமேஷா கருணாவெல்லப முதலிடத்தையும் பெற்றுள்ளார்கள்.

அதேவேளை, முதல் தடவையாக ஒலுவில் அல் ஹம்ரா கல்லூரியில் விஞ்ஞான மற்றும் கணித பிரிவுகளில் பரீட்சைக்கு தோற்றிய 5 மாணவர்கள் மருத்துவ மற்றும் பொறியியல் பீடத்திற்கு தெரிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

அதேநேரம், இப்பரீட்சையில் சித்தியடையத் தவறிய மாணவ மாணவிகள் தாம் வாழ்க்கையில் தோல்வியடைந்து விட்டோம் என்று சோர்ந்துவிடாமல் தொடர்ந்தும் முயற்சிக்க வேண்டும். வரலாற்றில் பெயர் பதித்த பலர் வாழ்க்கையில் பல தோல்விகளை சந்தித்து அதிலிருந்து படிப்பினை பெற்று முன்னேறியவர்கள் என்பதை மனதில் நிறுத்தி முயற்சிக்க வேண்டும் எனவும் அமைச்சர் ஹக்கீம் தனது வாழ்த்துக் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

1 comment:

Powered by Blogger.