Header Ads



உலமா சபையின், பெயரில் பொய்யான தகவல்கள்



-ஜம்மியத்துல் உலமாவின் பேஸ்புக்கிலிருந்து...-

முஸ்லிம்கள் உட்பட்ட இலங்கை வாழ் நுகர்வோர் பெருமக்களுக்கு ஒரு முக்கிய விடயத்தை பற்றி தெளிவுரையை தரும் நோக்கில் இவ்வூடக அறிக்கை வெளியிடப்படுகின்றது.

அன்மைக் காலம் முதல் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பெயரில் SMS குறுஞ்செய்தி, Whatsapp போன்றவற்றில் சில தீய சக்திகள் பொய்யான செய்திகள் சிலவற்றை பரப்பி வருகின்றன. இவற்றில், சில நிறுவனங்களின் உற்பத்திகள் சிலவற்றை ஹலால் என ஜம்இய்யத்துல் உலமா ஏற்க மறுத்துள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. இவையனைத்தும் பொய்யான செய்திகள் என்பதை கூறிக்கொள்ள விரும்புகின்றௌம்.

2013.12.31 முதல் ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாட்டில் இருந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபை முற்றாக நீங்கியுள்ளது என்பதையும் தற்சமயம், நுகர்வோர் பொருட்களுக்காக ஹலால் சான்றிதழ்களை வழங்கும் செயற்பாடு ‘ஹலால் எக்கெரிடேஷன் (கெரெண்டீ) லிமிடட்’ Halal Accreditation Council (Guarantee) Limited – HAC, என்ற நிறுவனம் மூலமே மேற்கொள்ளப்படுகின்றது என்பதையும் அறியத் தருகின்றௌம்.

2 comments:

  1. இதுவரை இந்த விடயம் யாருக்கும் தெரியாது

    ReplyDelete
  2. சிமந்தி மணல ஹலால் சாண்றிதல் உண்டா

    ReplyDelete

Powered by Blogger.