"மாட்டிறைச்சி" சிந்திக்க வேண்டியதும், செய்ய வேண்டியதும்..!!
MSM Naseem - BA (Hons)
இன்று நாட்டில் பரபரப்பாக கதைக்கப்பட கூடிய ஒரு விடயமாகவும், எம்மவர்களால் சமூக வலைத்தலங்களில் அதிகம் பகிரப்படக் கூடிய ஒரு விடயமாகவும் “இலங்கையில் மாடறுப்பை தடை செய்யப்போவதாக” அன்மையில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்த கருத்தே காணப்படுகிறது. இக்கருத்தானது இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அதிர்ச்சியையும் அபாயத்தையும் தோற்றுவித்துள்ளதுடன் இது தொடர்பாக இலங்கை முஸ்லிம்கள் தரப்பிலிருந்து பல எதிர்ப்பலைகள் நாளுக்கு நாள் வெளியிடப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது. இந்தப் பின்னனியை வைத்தே இக்கட்டுறை எழுதப்படுகிறது.
மாடறுப்பு தடைக்கு எதிராக எங்களது கருத்துக்களையும் உணர்வுகளையும் வெளிப்படுத்த முன் இவ்வாறு எதிர்ப்புக்களை தெரிவிப்பதனால் முஸ்லிம் சமூகத்துக்கு கிடைக்கப்போகும் பலன்கள் என்ன? இதனால் எமது சமூகத்துக்கு ஏற்படவிருக்கும் பின்விளைவுகள் எத்தகையது? இத்தடை தொடர்பான உண்மைப் பின்னனி நோக்கங்கள் எவையாக இருக்கும்? இது ஜனாதிபதியின் தனிப்பட்ட முடிவா அல்லது அரசாங்கத்தின் முடிவா? இதில் சர்வதேச தீய சக்திகளின் பங்குள்ளதா? இதனை எவ்வாறு கையாளப் போகின்றோம்? போன்ற கேள்விகள் தொடர்பாக சற்று ஆழ்ந்து சிந்திக்கவேண்டியுள்ளது.
1. அண்மைக்காலமாக உலகளவில் அரசியல் ரீதியாக ஒரு வியூகம் கையாளப்படுகிறது அதாவது ஒரு புதிய பிரச்சினையை அல்லது குழப்பத்தை சமூகத்தில் அல்லது நாட்டில் உண்டுபண்னி மக்களதும், ஊடகங்களினதும் பார்வையை விட்டும் ஒரு விடயத்தை திசைதிருப்பி அதை மறக்கடித்தல். இஸ்ரேல், அமெரிக்கா, ஜரோப்பா போன்ற நாடுகள் இதனை அதிகம் பயண்படுத்தி வருவருகின்றன. குறிப்பாக இஸ்ரேல் மீது மனித உரிமை மீறல், போர்க்குற்றச்சாட்டுகள் வருகின்றபோது உலகில் சில இடங்களில் பாரிய குண்டு வெடிப்புக்கள், துப்பாக்கிச் சூட்டு சம்பங்கள், அனர்த்தங்கள் ஏற்படுவதையும் அதன் பின் அவை மறக்கடிக்கப்படுவதையும் அவதாணிக்கலாம்.
இலங்கையை எடுத்துக்கொண்டால் கடந்த 2013ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெலிவேரிய பிரதேசத்தில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது இலங்கை பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 3வர் மரணமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக அப்போதைய அரசாங்கத்துக்கு எதிராக பல கண்டனங்களும், எதிர்ப்பலைகளும் எழும்ப ஆரம்பித்தன. இந்தக் காலப்பகுதியில்தான் கொழும்பு கிரேண்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான இனவெறியர்களின் தாக்குதல் திடீரென்று நடத்தப்பட்டது (வெலிவேரிய தாக்குதல் இடம்பெற்று 9 நாட்களில்). இத்தாக்குதல் தொடர்பாக கருத்து தெரிவித்த அப்பேதைய எதிர்க்கட்சியின் முக்கிய பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் 'வெலிவேரிய தாக்குதல் சம்வத்தைவிட்டும் மக்களின் பார்வையை திசை திருப்பவே கிரேண்ட்பாஸ் பள்ளிவாயல் மீதான தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டதாக' ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இன்று நாட்டில் புதிய அரசியல் யாப்புத்திருத்தம், விகிதாசார மற்றும் தொகுதிவாரி கலந்த புதிய தேர்தல் முறைக்கான எல்லை நிர்ணயம் ஆகியன நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. மறுபுறத்தில் மக்களின் செல்வங்களை கொள்ளையடித்து உலகை இரத்தக் களமாக்கிக் கொண்டிருக்கும் இலுமினாட்டிகளின் (யூத ஸியோனிஸ்ட்டுக்கள்) ஒரு குழுவினர் 'அமெரிக்க யூத வர்த்தக சங்கம்' என்ற பெயரில் அண்மையில் இலங்கைக்கு வந்து தாம் இலங்கையுடன் வர்த்தக தொடர்புகளை வைதத்துக்கொள்ள விரும்புவதாக குறிப்பிட்டுள்ளனர். இதற்கான பேச்சுவார்த்தைகள் தற்போது நடந்துகொண்டிருக்கின்ற அதேவலை இரத்தவாடை கொண்ட இவர்களுடன் இலங்கை அரசாங்கம் எந்த தொடர்புகளையும் வைத்துக்கொள்ளக் கூடாதென இலங்கை முஸ்லிம்கள் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. எனவே இவற்றிலிருந்து அல்லது இது போன்ற வேறொரு விடயத்தை விட்டும் முஸ்லிம்களின் கவனத்தை திசைதிருப்புவதற்கான ஒரு செயற்பாடாகவும் இது இருக்கலாம்.
2. ஒரு வேலை இத்தடைக்கான பின்னனி வியாபார நோக்கமாகவும் இருக்கலாம். அதாவது ஒன்று இந்தியாவின் மோடி அரசைப் பின்பற்றி இலங்கையிலும் மதரீதியான காரணத்தை முன்னிருத்தி மாடறுப்பை தடை செய்து, வெளிநாடுகளுக்கு ஏறற்றுமதி செய்து அதிக சம்பாதிப்பதற்காக காத்திருக்கும் ஒரு குழுவினரின் பின்புலத்தை கொண்டதாக இருக்கலாம். அல்லது வெளிநாட்டு நிறுவனத்திடமிருந்து மாட்டிறைச்சியை இறக்குமதி செய்வதாக ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையிலும் இத்தடை காணப்படலாம்.
3. இன்று நாட்டில் பல இனவாதக் குழுக்கள் காணப்படுகின்றன. இவற்றில் சில குழுக்களுக்கு பெரும்பான்மை மக்களிடத்தில் செல்வாக்கும் காணப்படுகின்றது. இவ்வமைப்புக்கள் பல இடங்களில் தற்போதைய அரசாங்கத்தை விமர்சித்து வருகின்றன. எனவேதான் இவர்களை திருப்திப்படுத்தும் விதமாக ஜனாதிபதி மற்றும் இவர்களுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட ஒரு உடன்பாட்டின் அடிப்படையில் இத்தடை பற்றிய அறிவிப்பு வந்திருக்கலாம்(ஜனாதிப இத்தடை பற்றிய அறிவிப்பை வெளியிட முன் பொது பல சேனாவுடன் மூடிய அறையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக செய்திகள் கசிந்திருந்தமை குறிப்பிடத்தக்கது)
4. அல்லது “ராவண பலய” என்ற இனவாத அமைப்பு ஊடகங்களுக்கு இது தொடர்பாக கருத்து தெரிவித்தபோது 'மாடுகளை கண்னியப்படுத்தும் தைப்பொங்கள் தினத்தன்று அதனை கடவுளாக வணங்கும் இந்துக்களை கொண்டிருந்த சபையிலேயே ஜனாதிபதி இது பற்றி கருத்து தெரிவித்திருந்தார் ஆனால் அது நடக்காது' என குறிப்பிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
நாம் செய்ய வேண்டியது என்ன?
1. நாட்டின் ஜனாதிபதியையும், அரசாங்கத்தினையும் விமர்சிப்பதை முற்றாக தவிர்த்துக் கொள்ளல் வேண்டும், ஏனெனில் இவ்வாறான செயற்பாடுகள் ஏனைய மதத்தினரதும், அரசாங்கத்தினதும், அரசாங்கம் சார்பானவர்களினதும் எதிர்ப்புணர்வுகள் முஸ்லீம்கள் மீது உருவாக வழிவகுக்கலாம். மேலும் இவ்வாறான செயற்பாடுகளால் எமது கோரிக்கைகள் நிராகரிக்கப்படவும் வாய்ப்புள்ளது.
2.இதற்கான எங்களது எதிர்ப்புகளை தெரிவிக்கும்போது ஆக்ரோ ஷமான மற்றும் ஏனைய மதங்களினை, மத அமைப்புக்களை விமர்சிக்கும் வார்த்தைகளை முற்றாக தவிர்த்து அனைத்து தரப்பினரும், எமது தரப்பில் நியாயங்கள் உள்ளதை உணர்ந்து கொள்ளும் வகையில் அறிவியல் ரீதியாகவும், ஆதார பூர்வமாகவும் அழகிய முறையில் தெளிவாக முன்வைக்கப்படல் வேண்டும்.
3.போதைப்பொருள்களுக்கு எதிராக எமது கருத்துக்களை பரவலாக்கள் - மதரீதியான காரணத்தை அடிப்படையாக வைத்தே இந்த மாடறுப்புத்தடை வரவுள்ளது. மாடறுப்பு தடை செய்யமுன் போதைப்பொருற்களை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைப் பரப்பவேண்டும். ஏனெனில் இன்று சமூகத்தில் இடம்பெறும் அனைத்து குற்றங்களுக்கும், பிரச்சினைகளுக்குமான அடிப்படைக் காரணியாகவும் அதேவேலை அனைத்து மதத்தினாலும் தடை செய்யப்பட்ட ஒன்றாகவும் இந்த போதைப்பொருள்கள் காணப்படுகின்றன.
இதன் மூலம் இவர்களின் மாடறுப்புத்தடை வேடம் களையப்படும். அதாவது அனைத்து மதங்களாலும் தடை செய்ய வழியுறுத்தப்பட்டுள்ள போதைப்பொருட்களை தடை செய்யாமல் மாட்டிறைச்சியை மட்டும் தடை செய்யப்படுவதன் நோக்கம் உண்மையில் மதரீதியான காரணத்துக்காகவா? அல்லது இனவாதத்துக்காகவா? அல்லது வியாபார நோக்கத்துக்காகவா? அல்லது மக்களின் பார்வையை திசைதிருப்புவதற்காகவா? அல்லது ஒரு சிலரை திருப்திப் படுத்துவதற்காகவா? அல்லது வேறு காரணங்களுகக்காகவா? என்ற தெளிவையும், எமது பக்கமுள்ள நியாயத்தையும் அன்னிய மதங்களைச் சார்ந்த மக்கள் பெற்றுக்கொள்ள இது உதவும்.
தொடரும்...
Well said Mr Naseem.
ReplyDeleteWe expect more from you.