தலைநகரில் ஜனாதிபதி மைத்திரிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் (படங்கள்)
கொழும்பு - புறக்கோட்டை பகுதியில் தேசிய சங்க சம்மேளனம் தற்போது பாரிய ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றது.
தற்போதைய அரசாங்கத்தினால் மக்களுக்கு எவ்வித நன்மைகளும் கிடைக்கவில்லை எனவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை எனவும் தெரிவித்தே இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுகின்றது.
அத்துடன், அரசாங்கம் இராணுவத்தினரை விசாரணைக்கு உட்படுத்தி வருவதாகவும், அதற்கு தாம் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அரசாங்கத்திற்கு எதிராக போராட்டங்கள் எதிர்வரும் நாட்களிலும் தொடரும் என அறிவித்துள்ள தேசிய சங்க சம்மேளனம், இந்த ஆர்ப்பாட்டங்கள் பருத்தித்துறை முதல் தேவேந்திரமுனை வரை நடாத்த திட்டமிட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக பதவியேற்று ஒரு வருட பூர்த்தி நிகழ்வுகள் இன்றைய தினம் நடாத்தப்பட்டு வருகின்ற நிலையில் இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

எங்கே இவர்களும் விசரிக்கப்பட்டுவிடுவார்களோ என்ற பயம் போலும்.
ReplyDeleteஉப்புத்திண்டவன் தண்ணீர் குடித்திதானே ஆகனும்.
அதிகமாக விசாரணைகள் செய்யாது பிடித்துபிடித்து முதலில் அடைத்துவிட்டால் இவர்களின் அட்டகாசங்கள் அடங்கும்.