‘மிகவும் விரும்பத்தக்க நாடு’ என்ற நிலையை, சிறிலங்காவுக்கு வழங்குகிறது பாகிஸ்தான்
வர்த்தகத்துறையில், சிறிலங்காவுக்கு மிகவும் விரும்பத்தக்க நாடு என்ற நிலையை வழங்குவதற்கு பாகிஸ்தான் தயாராக இருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், இன்று சிறிலங்கா அதிபர் செயலகத்தில் நடந்த பேச்சுக்களின் போது, இரு நாடுகளுக்கும் இடையில் 8 புரிந்துணர்வு உடன்பாடுகள் கையெழுத்திடப்பட்ட பின்னரே இதனைத் தெரிவித்துள்ளார்.
“இந்த புரிந்துணர்வு உடன்பாடுகள், இரு நாடுகளுக்கும் இடையில் பல்வேறு துறைகளில், ஒத்துழைப்பை ஊக்கப்படுத்தும்.
இரு நாடுகளுக்கும் இடையில் ஆண்டுக்கு ஒரு பில்லியன் டொலருக்கு இருதரப்பு வர்த்தக வாய்ப்புகள் உள்ளன.
சிறிலங்காவின் நீண்டகால பொருளாதார நலன்கருதி, பரஸ்பரம் ஏற்றுக் கொள்ளப்படும் விதிமுறைகளுக்கு அமைய, சீமெந்து மற்றும் சீனி தொழிற்சாலைகளை நிறுவ பாகிஸ்தான் உதவும்.
தொடர்ச்சியாக கடற்படைக் கப்பல்களை துறைதுகங்களுக்கு அழைப்பது, இருநாட்டு படையினரும், இராணுவ ஒத்திகைகள், கருத்தரங்குகள், மற்றும் பயிற்சிகளில் பங்கேற்பது போன்ற விடயங்களிலும் மேலும் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment