Header Ads



பாலமுனை முஸ்லிம் காங்கிரஸில் பிளவு, ஹக்கீம் தலைமையில் அவசர கூட்டம்

-அபு அலா –

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அம்பாறை மாவட்ட பாலமுனை அமைப்பாளருடன் அதிருப்தி அடைந்து மாற்றுக் குழுவாக இயங்கி வரும் மு.கா. கட்சியின் பாலமுனை ஜனனாயக மத்திய குழுவினருக்கும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றஊப் ஹக்கீகுக்கும் இடையிலான விசேட சந்திப்பு நேற்று மாலை (14) கொழும்பில் இடம்பெற்றதாக மத்திய குழுவின் இணைப்பாளர் எம்.ஏ.சதாத் இன்று (15) தெரிவித்தார்.

ஜனநாயக மத்திய குழுவின் தலைவர் ஐ.எல்.சுலைமாலெவ்வை தலைமையில் இந்த விசேட சந்திப்பு கட்சியின் தலைமையகமான தாறுஸ்ஸலாமில் இடம்பெற்றது.  

இதில் சுகாதார பிரதியமைச்சர் பைசால் காசிம், கடசியின் உயர்பீட செயலாளர் மன்சூர் ஏ.காதர் உட்பட ஜனநாயக மத்திய குழுவின் குழுவின் இணைப்பாளர்களான எம்.ஏ.சதாத், அதிபர் எஸ்.எம்.எம்.ஹனீபா, ஏ.எல்.அலியார் மத்திய குழுவின் செயலாளர் கே.ஜிஹார்டின் பொருளாளர் ஏ.பீ.றிஜால் உட்பட கட்சியின் ஆரம்ப காலப் போராளிகள் இளைஞர்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

முஸ்லிம் காங்கிரஸின் பாலமுனை மத்திய குழுவினரும், அமைப்பாளரும் யாப்புக்கு முரனான செயற்பாடுகளில் ஈடுபட்டுவருவதாகவும், கட்சியின் ஆரம்பகால போராளிகளை புறம்தள்ளிவிட்டு தங்களின் விருப்பத்துக்கெற்ப நடந்துவருவதாகவும், கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளை கருத்திற்கொண்டு செயற்படாமலும் ஈடுபட்டுவருவதாகவும் இதனால் கட்சியின் ஆரம்பகால போராளிகள், மத்திய குழுவின் மூத்த தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட பலர் இதிலிருந்து விலகிச் சென்றுள்ளதாகவும் இக்குழுவினர் கட்சியின் தலைவரிடம் எடுத்துரைத்தனர்.

மேலும், கட்சியின் தலைமை பல வியுகங்களை வகுத்து கட்சியையும், கட்சியிலுள்ளவர்களை அரவனைத்து வளர்க்கும் முயற்சியில் அரும்பாடுபட்டு வருகின்ற இச்சந்திர்ப்பத்தில் பாலமுனை அமைப்பாளர் உள்ளிட்ட குழுவினர் இவ்வாறு செயற்பட்டு வருகின்ற விடயம் பெரும் கவலைதரக் கூடியதாகவுள்ளது.

அவர்களின் செயற்பாட்டால் பல கட்சிச் போராளிகள் மாற்றுக் கட்சியில் இணைந்து வருகின்றனர். அவர்களை அவ்வாறு செல்ல விடாமல் ஜனநாயக மத்திய குழுவினர் கட்சியின் பக்கம் அழைத்து வருவதுடன் அரவனைத்தும் வருகின்றது இக்குழுவினர் தெரிவித்தனர்.

இக்குழுவினரின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவரும் நகர அபிவிருத்தி மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றஊப் ஹக்கீகுக்கும் விளக்கமளிக்கையில்,

உங்களினால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் கோரிக்கைகளும் ஒரு கடினமான கோரிக்கைகள் அல்ல. இவைகளை மிக இலகுவாக தீர்த்து வைக்கக் கூடியவைகளாகும். இச் பிரச்னைகளை தீர்த்து வைக்க இரு தரப்பினரையும் எதிர்வரும் 18 ஆம் திகதிக்குள் அழைத்து இதற்கான தீர்வினை பெற்றுத்தருவதாகவும் கட்சியின் தலைவர்  அமைச்சர் றஊப் ஹக்கீம்  பாலமுனை ஜனனாயக மத்திய குழுவினரிடம் இதன் போது உறுதியளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

இச்சந்திப்பு சுமார் 3 மணித்தியாலம் வரை இடம்பெற்றதும் குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.