மஹிந்த ராஜபக்ஷவின் எதிர்காலம், எனக்கு தேவையற்ற விடயம் - மைத்திரி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அரசியல் எதிர்காலம், தனக்கு தேவையற்ற விடயம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
பீ.பீ.சி ஊடகத்துடன் இடம் பெற்ற செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
தனக்கு நாடு மற்றும் மக்கள் தொடர்பான விடயங்கள் மாத்திரமே முக்கியமானது என ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி அரசியல் எதிர்காலத்துக்காக புதிய கட்சியொன்றை ஆரம்பிக்கவுள்ளமை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் செவ்வியின் போது கலந்துரையாடுவதற்காக இணைந்த ஊடகவியலாளர் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்த ஜனாதிபதி, 'கட்சிகள் உருவாகின்றைமை தொடர்பாக ஆராய்வதை விட மக்கள் சேவைக்கு முதல் இடம் கொடுப்பதே எனது நோக்கம்' என குறிப்பிட்டார்.
Do service to the nation and protect yourself.
ReplyDeleteஇந்நாள் பாராளுமன்ற உறுப்பினர் குருனாகல் மாவட்ட மக்களால் தெரிவாகி அவர்களது பிரதிநிதியாகச் செயற்பட வேண்டியவர் பற்றி, அதிகப்படியான மூவின இலங்கை மக்களால் தெரிவு செய்யப்ட்ட இந்நாட்டான் தலைவரான இந்நாள் ஜனாதிபதி சிந்திக்க வேண்டியதில்லை.
ReplyDeleteமேலும், மஹிந்தர் ஜனாதிபதியாக இளைப்பாறியவருமல்லர். யாப்பினைத் தனக்குச் சாதகமாகத் திருத்தி, மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டு மண்ணைக் கவ்வியவர்.