முஸ்லிம்களின் வியாபாரத்தை புறக்கணிப்போம், பேருவளையில் இனவாத போஸ்டர்கள்
பேருவளை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இரவு பல்வேறு பகுதிகளிலும் இனவாதத்தை தூண்டும் சிங்கள மொழியிலான போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள குறித்த போஸ்டர்களில் ''முஸ்லிம்களின் வியாபாரத்தை புறக்கணிப்போம், சர்வ மத ஒற்றுமையை இல்லாதொழிப்போம், சிங்கள குழந்தைகளை பாதுகாப்போம்'' எனும் அர்த்தம் கொண்ட வாசகங்கள் அச்சிடப்பட்டுள்ளன.
பேருவளை பிரதேச சபைக்குட்பட்ட, ஹெட்டிமுல்ல, பாடகொட மற்றும் பேருவளை நகர பிரதான வீதிகளில் இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இது தொடர்பில் பேருவளை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.ஆர்.எம்.பதியுதீன், அளுத்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு சென்றதையடுத்து போஸ்டர்கள் பொலிசாரினால் அகற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பில் பேருவளை பிரதேச சபையின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஏ.ஆர்.எம்.பதியுதீன் Vi க்கு கருத்து தெரிவிக்கையில், இவ்வாறான இனவாத செயற்பாடுகள் கவலை தருகின்றன.
கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இவ்வாறான இனவாத செயல்கள் தலைதூக்கியதன் வெளிப்பாடாகவே அளுத்கம நகரில் பாரிய வன்முறைகள் தோற்றம் பெற்றன. இதன் காரணமாக குறித்த அரசாங்கம் அழிவைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இந் நிலை தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திற்கும் வந்துவிடக் கூடாது.
மீண்டும் தலை தூக்கும் இவ்வாறான இனவாத செயற்பாடுகளை அரசாங்கம் கட்டுப்படுத்த முன்வர வேண்டும்.
இல்லாவிடின் எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் அரசாங்க தரப்பினர் கடுமையான பாதிப்புகளை சந்திக்க வேண்டி வரும் என்பதையும் நினைவுபடுத்த விரும்புகிறேன் என்றார்.
இதை விட கேவலமான கோழைத்தனம் வேரேதுமில்லை இவை அத்தனையும் பின்கதவால் வரும் கூட்டத்தின் வேலையே
ReplyDelete