Header Ads



காதியானிகளை முஸ்லிம்கள் அல்ல, என பிரகடனப்படுத்துங்கள் - அரசாங்கத்திடம் கோரிக்கை (பகுதி 2)

காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என சர்வதேச முஸ்லிம்களினலும் இலங்கை முஸ்லிம்களினாலும் வெளியிடப்பட்ட பிரகடனங்களின் தொகுப்புக்கள் அடங்கிய "அகமதிய ஜமாஅத்தினர் அல்லது காதியனிகள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்" என்ற நூல்  கடந்த ஞாயிற்றுக் கிழமை [17.01.2016] நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் வெளியிடப்பட்டது. இந்த வைபவத்தில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் ரிஸ்வி முப்தி ஆற்றிய உரையின் தொகுப்பு இங்கு வெளியிடப்படுகின்றது.

பகுதி 1  http://www.jaffnamuslim.com/2016/01/1_24.html

தொகுப்பு: - எம்.ஜே.எம். தாஜுதீன்

 “காதியானிகளும் மனிதர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு சகல உரிமைகளும் வழங்கப்பட வேண்டும். ஆனால்- முஸ்லிம்கள் என்ற உரிமையை அவர்களுக்கு ஒருபோதும் வழங்கக் கூடாதென” அந்தக் கடிதத்தில் எழுதினார். அதேபோன்று காதியானிக் கொள்கையில் இருந்த பாகிஸ்தானின் முக்கியஸ்தர் லால் அஹ்மத் அக்பர் ஹுசைன் என்பவர் 1935 ஆம் ஆண்டு லாஹூரில் 30 ஆயிரத்துக்கம் மேற்பட்ட மக்கள் கலந்துகொண்ட மாநாட்டில் தௌபா செய்து இஸ்லாத்தில் இணைந்தார். அப்போது அவர் “கடந்த 3 வருட காலமாக நான் காதியானிக் கொள்கையில் இருந்தேன். அதற்காக காதியானிகள் 50 ஆயிரம் ரூபாவை எனக்காகச் செலவழித்தனர். எனினும் பின்னர் நான் இறைவனின் அருளால் தௌpவூ பெற்று மீண்டும் இஸ்லாத்தில் இணைந்துகொண்டேன்” என்று கூறினார். 

இறுதி நபித்துவத்தைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் பற்றி நாம் இது வரையில் முஸ்லிம்களுக்கு மட்டுமே விளக்கமளித்துவந்தோம். முஸ்லிம்கள் அல்லாதவர்கள் மத்தியில் காதியானிகள் இஸ்லாத்தை பிழையான முறையில் அறிமுகம் செய்து வருவதன் காரணமாக நாம் அவர்களுக்கு இஸ்லாம் தொடர்பான உண்மையான விளக்கத்தை அளிக்கக் கடமைப்பட்டுள்ளோம். அந்த அடிப்படையிலேயே இன்று இந்த நூலை வெளியிடுகிறௌம். இம்முயற்சிக்கு இலங்கையில் உள்ள 20 லட்சம் முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றனர். இன்று இஸ்லாத்துக்கு எதிராக பல தீய சக்திகள் செயற்படுகின்றன. இச் சக்திகளை முறியடிக்க முஸ்லிம்கள் திட்டமிட்டுச் செயற்பட வேண்டும். நீர்கொழும்புப் பிரதேசத்தில் இறுதி நபித்துவத்தைப் பாதுகாப்பதற்கான தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியத் தேவையாகும்.

இதற்காக நீர்கொழும்பு பள்ளிவாசலிலோ அல்லது வேறு ஒரு இடத்திலோ தனியான செயலகம் ஒன்றை உருவாக்குங்கள். அதில் இறுதி நபித்துவம் தொடர்பில் நன்கு தேர்ச்சி பெற்ற இரு உலமாக்களை கடமையில் அமர்த்துங்கள். அங்கு வரும் மக்களுக்கு இறுதி நபித்துவம் பற்றி விளக்கமளியூங்கள். சிறு நூல்களை வெளியிடுங்கள். குடும்பம் குடும்பமாக காதியானிகனை இஸ்லாத்தின்பால் இணைக்கும் தீவிர முயற்சியில் ஈடுபடுங்கள். இதற்காக தனவந்தர்கள் தமது செல்வங்களை செலவிடுங்கள். வாலிபர்கள் தமது கடும் உழைப்பை வழங்குங்கள். தகுந்த உலமாக்களின் வழிகாட்டலுடன் இத்திட்டத்தை நடைமுறைப்படுதினால் நீர்கொழும்புப் பிரதேசத்தில் காதியானிகளை இஸ்லாத்தில் இணைப்பதில் நல்லதொரு மாற்றத்தைக் காணலாம். இந்த நாட்டின் மேன்மை தங்கிய ஜனாதிபதி- பிரதமர்- எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்களுக்கும் காதியானிகள் முஸ்லிம்கள் அல்லர் என்பது உணர்த்தப்பட வேண்டும். அத்துடன் அவர்கள் மேற்கொண்டுள்ள தவறான பிரசார நடவடிக்கைகள் முறியடிக்கப்பட வேண்டும். இதற்காக பாராளுமன்றத்தில் உள்ள 21 முஸ்லிம் பிரதிநிகளும் முன்வர வேண்டும். அவர்கள் ஒவ்வொருவரும் முஸ்லிம் அல்லாத 10 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு காதியானிகள் பற்றியம் இறுதி நபித்துவம் பற்றியூம் தௌpவூபடுத்த வேண்டும். அதற்காக அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா ஒத்தழைப்பு வழங்கத் தயாராக இருக்கின்றது. 

முஸ்லிம் சட்டதரணிகள் சங்கத்தின் தலைவர் பாயிஸ் முஸ்தபா அவர்கள் தலைமையில் நாம் பாராளுமன்றத்துக்கு வந்து அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தயாராக இருக்கிறௌம். 2007 ஆம் ஆண்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா 5 பிரகடனங்களை முன்வைத்தது. அதில் முதன்மையானது இறுதி நபித்துவத்தைப் பாதுகாப்பதே. வேற்றுமையில் ஒற்றுமை- சகவாழ்வூ போன்றவை ஏனைய விடயங்களாகும். எந்த ஒரு நபியூம் மற்றொரு நபியை துண்புறுத்தியது கிடையாது. நோவினை தரக்கூடிய வார்த்தைகளை பேசியது கிடையாது. ஆனால் மிர்ஸா குலாம் முகம்மது நபி (ஸல்) அவர்களையூம் ஏனைய நபிமார்களையூம் கீழ்த்தரமாக விமர்சித்துள்ளார். “ஈஸா (அலை) அவர்கள் மது பானம் அருந்தக்கூடியவராக இருந்தார். அதனால்தான் ஐரோப்பியர்கள் அதிகம் மதுவருந்தும் பழக்கம் கொண்டவர்களாக இருக்கிறார்கள்” என்றும் விபசாரிகளின் கைகளினால் ஈஸா (அலை) அவர்களின் உடல் மீது நறுமணம் பூசப்பட்து” என்றும் தமது நூலொன்றில் எழுதியூள்ளார்.  மிர்ஸா குலாம் எழுதிய  “ஜீஸஸ் என்ட் காதியான்” என்ற நூலை மொழிபெயர்த்து கிரிஸ்த்தவர்கள் மத்தியில் விநியோகியூங்கள். அப்போது இந்தக் காதியானிகள் யார் என்பதை கிரிஸ்தவ மக்கள் நன்கு புரிந்து கொள்வார்கள்.

நாம் மிகவூம் நிதானமாகவூம் தூரநோக்கோடும்தான் எமது வார்;த்தைப் பிரயோகங்களை முன்வைக்கிறௌம். கால நிலவரம் அறிந்தே செயற்படுகிறௌம். இதற்காக நாம் ஊடகங்களை பெரிய அளவில் பயன்படுத்த நாம் விரும்பவில்லை. மிர்ஸா குலாம் பிற்காலத்தில் மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக அவரது மக்கள் தெரிவித்துள்ளனர். சில நேரங்களில் பைத்தியம் பிடித்தவர்போல் காணப்பட்டார். முன்னுக்குப் பின் முரணாக உளரினார்.  சில நேரங்களில் நான் ஈசா என்றார். சில நேரங்களில் நான் இப்றாஹீம் என்றார். எனக்கு “ஹைழு” வருகின்றது என்று வேறு சில நேரங்களில் கூறினார். இவர்கள் விடயத்தில் முஸ்லிம்கள் நிதானமாக நடந்துகொள்ள வேண்டும். சண்டை சச்சரவூகளுக்கு போகாதீர்கள். விவாதங்களில் ஈடுபடாதீர்கள். அவர்களுக்கு நல்ல முறையில் உண்மையை உணரச் செய்யூங்கள். அண்மைக் காலமாக பாகிஸ்தனில் உள்ள காதியானிகள் அகதிகள் அந்தஸ்து கோரி பெருமளவில் இலங்கை வர ஆரம்பித்துள்ளர். இவர்களின் நடவடிக்கைகளால் இலங்கை முஸ்லிம்களுக்கு பெரும் ஆபத்துக்கள் ஏற்பட இடமுண்டு என்பதால் இவர்கள் விடயத்தில் இன்றைய அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டுமெனவூம் கேட்டுக்கொள்கிறேன்.

நீர்கொழும்புப் பிரதேசத்தில் வாழ்ந்த- மற்றும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் உலமாக்கள் இறுதி நபித்துவத்தைக் காக்கும் முயற்சியில் தங்களது பங்களிப்பை வழங்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு நாம் நன்றி தெரிவிக்கிறௌம். இறுதியாக இந்த நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அனைத்து அரசியல் பிரமுகர்களிடமும் நாம் வேண்டிக்கொள்டவது என்னவென்றால். காதியானிகள் அல்லது அகமதியாக்கள் என்போர் முஸ்லிம்கள் அல்லர் என்பதை  உள்நாட்டு முஸ்லிம்களும் வெளிநாடுகளில் வாழும் முஸ்லிம்களும் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர். காதியானிகன் முஸ்லிம்களின் அடையாளத்தை வைத்துக்கொண்டு பௌத்த மதம்- இந்து மதம்- மற்றும் கிரிஸ்தவ மதங்களைப் பற்றி தவறான கருத்துக்களை முன்வைக்கும்போது அது இந்த நாட்டில் வளர்ந்துவரும் மதங்களுக்கிடையிலான மற்ற சமுகங்களுக்கிடையிலான நல்லுறவூகளை சீர்குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை. எனவே மிர்ஸா குலாம் அஹமத் என்பவரும் அவரது கொள்கையை பின்பற்றுபவர்களும் முஸ்லிமகளை விட்டும் வேறுபட்ட ஒரு கூட்டததினர் என்று அதிமேன்மைதகு ஜனாதிபதியவர்களும் கொளரவ பிரதமர் அவர்களும் நம் நாட்டு அரசாங்கமும் பிரகடனப்படுத்தும் என எதிர்பார்க்கின்றௌம் என்றும் ரிஸ்வி முப்;தி கூறினா

No comments

Powered by Blogger.