Header Ads



அமெரிக்காவின் படகுகள், வீரர்களை ஈரான் சிறைபிடித்துள்ள ஈரான்

தங்கள் நாட்டு கடற்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக அமெரிக்காவின் படகுகள் மற்றும் வீரர்களை ஈரான் சிறைபிடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவுக்கு சொந்தமான இரு படகுகள் குவைத்-பஹ்ரைன் நாடுகளுக்கு இடையில் சென்றுகொண்டிருந்தது.

இந்நிலையில் அந்தப் படகுகள் திடீரென பழுதானதால் திசைமாறி ஈரான் கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து அனுமதியில்லாமல் தங்கள் நாட்டின் கடல் எல்லைக்கு நுழைந்ததாக கூறி அந்த படகுகளை ஈரான் சிறைப்பிடித்தது.

மேலும் அதில் இருந்த 9 ஆண்கள் ஒரு பெண் உட்பட கடற்படை வீரர்களை சிறைப்பிடித்து வைத்துள்ளது.

 தங்கள் கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததற்காக அமெரிக்கா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி ஜான் கெர்ரி தொலைபேசி மூலம் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி ஜாவத் ஷரிபை தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டுக்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதையடுத்து படகுகள் மற்றும் வீரர்கள் புதனன்று விடுதலை செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது.

No comments

Powered by Blogger.