Header Ads



இலங்கையின் ரொஷானா காரியப்பர், பிரித்தானியாவில் மகத்தான சாதனை

"ரொஷானா காரியப்பர் அவர்கள், தகவல் தொழில் நுட்பத்தின் அதியுயர் துறையான CCIE (Cisco Certified Internet Expert ) யில் மாபெரும் சாதனை படைத்துள்ளார்.

அல்ஹம்துலில்லாஹ்

பிரித்தானியா , மில்டன் கீன்சில் வாழும் கல்முனையைச் சேர்ந்த மர்ஹூம் டாக்டர் ஜமீல் அவர்களின் புதல்வியும் பிரபல கணணி தொழில் நுட்ப நிபுணர் ஹாரித் (சனா) காரியப்பர் அவர்களின் துணைவியுமான திருமதி "ரொஷானா காரியப்பர்" அவர்கள்,

பெல்ஜியத்தின் தலை நகராம் "Brussels"யில் 8 மணி நேரம் நடைபெற்ற பரீட்சையில் சித்தியெய்தி ,எமது சமூகத்துக்கும் தாய்நாட்டுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார். இத்துறையில் , இலங்கையின் முதல் பெண் சாதனையாளர் என்ற பெருமையையும் இவர் தட்டிக் கொண்டார்.

கல்வியின் உச்சத்தில் தாமே இருப்பதாகத் தம்மட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஐரோப்பிய மாணவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு திருமதி ரோஸானா காரியப்பர் இந்த இமாலயச் சாதனை,சாதித்துள்ளமையை வாழ்த்துவதற்கு வார்த்தைகள் இல்லை.

வீட்டுவேலைகளையும் ,பிள்ளைகளின் கற்பித்தலையும் கவனித்துக் கொண்டே இவர் இதனைச் சாதித்துள்ளார். 

CCIE என்பது Phd கற்கை நெறிக்கு ஒப்பானதாகும். இதற்காக வழங்கப்படும் (தொழில்) ஆரம்ப வருடச் சம்பளமே சுமார் £60,000 ஆகும். சில வருட அனுபவங்களின் பின் £100,000ஆக மாறும்.

இவரின் மூத்த புதல்வர் ரிஸ்நி காரியாப்பரும் இத்துறையில் 18 வயதில் உலக சாதனை படைத்தவர் என்பது குறிப்பிடத் தக்கது.

8 comments:

  1. masha allah kalmunaikku maddumalla all ceylonukkume perumai

    ReplyDelete
  2. மாஷா அல்லாஹ் வாழ்த்துவோம்

    ReplyDelete
  3. Congrats Roshana!

    உங்கள் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அடைந்திருக்கக்கூடிய மகிழ்வை எண்ணிப்பார்க்கின்றேன். அந்த ஒரு குறையைத் தவிர, ஒரு பெண்ணாக உங்கள் மகிழ்ச்சியில் முழுமையாக பங்கேற்றுக்கொள்கின்றேன்.

    பாராட்டுக்கள்!

    ReplyDelete
  4. Masha Allah. And please share your knowledge with others.

    ReplyDelete
  5. எமது மண்ணுக்குரிய பெருமை. Masha Allah

    ReplyDelete
  6. We are really Proud of You !

    ReplyDelete

Powered by Blogger.