"முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான நிகழ்ச்சி நிரலும், சிங்கள இனவாதமும்"
-அபூ சுஹா -
வில்பத்து பகுதியில் இடம் பெறும் முஸ்லிம் குடியேற்றம் இந்தியாவுககும்,ஏனைய நாடுகளுக்கும் அச்சுறுத்தலாக அமையும் என்று பொதுபலசேனாவின் நிறைவேற்றாளர் என்று அறிமுககப்படுத்திவரும் லிலந்த பெரேரா என்பவரால் தெரிவிக்கப்பட்டுவரும் கருத்து மற்றிலும் உண்மைக்கு புறம்பானது என பல அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக கனடா மற்றும் அவுஸ்திரேலிhயவினை பிரதானமான தளமாக கொண்டு இயங்கும் சமூக நீதிக்கானதும், மனிதத்துவத்துவத்துக்குமான இணைந்த கரங்கள் என்னும் அமைப்பு வெளியிட்டுள்ள ஒரு செய்தி குறிப்பில் இது தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் மக்களது உரிமைகள் சிங்கள இனவாத சக்திகளினால் மறுக்கப்பட்டதன விளைவாகவே வடக்கிலும்,கிழக்கிலும் இந்த நிலை தோற்றம் பெற்றது.இதற்கு பொறுப்புக் கூற வேண்டியது அப்போதைய ஆட்சியாளர்களும்,அவர்களது பின்னின்று செயற்பட்ட தற்போது செய்றபடும் இனவாத அமைப்புக்கள் போன்றது என்பதை வெளிப்படைத்தன்மையுடன் எடுத்துரைப்பது பொருத்தமாகும்.
இலங்கையில் வடக்கு பிரதேசம் என்பது ஒரு முன்மாதிரியான மாகாணமாகும்,தமிழர்களும்,முஸ்லிம்களும்,சிங்களவர்களும் மிகவும நெருக்கமாக மொழி கடந்து உண்ரவுகளால் சகோரத்துவம் கொண்டவர்களாகவே இருந்து வந்துள்ளனர்.தமிழீழ கோறிக்கை வலுப்பெற்றதனால் அவர்களது சட்டங்களுக்கும்,அடிப்படை தகவல் பறிமாற்றங்களுக்கும் முஸ்லிம்கள் தடையாக இருப்பார்கள் என்பதினால் தான் வெளியேற்றப்பட்டார்கள என்பதை அபபோதைய சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகர் அன்ரன் பாலசிங்கம் பல்வேறு சந்தரப்பங்களில் கூறிய மறுகணம்,அவரது மரணத்திற்கு முற்பட்ட சில தினங்கள் இந்த வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம்என்பது பெரும் மனித உரிமை மீறல்கள் என்பதையும் வெளிப்படுத்தியிருந்தார்.
இவவாறானதொரு சூழலில் தான் கடந்த மஹிந்த ராஜபக்சவின் அரசு கடும் தாக்குதல்களை தொடுத்து தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்து அவர்களது செய்றபாட்டை முடக்கியது.இதன் மூலம் மீண்டும் நாட்டில் இவாத சிந்தணை இருக்க கூடாது என்ற செய்தியினை சர்வதேசத்துக்கு ஒருபுறம் சொன்னாலும்,மறைவான முறையில் சிங்கள இனவாத கடும்போக்கு அமைப்புக்கள் சிலவற்றிற்கு உதவி செய்த விடயத்தையும் எவராலும் மறுக்க முடியாது என்பதும் உண்மை.
இந்த அடிப்படையில் இனவாத கறுத்துக்களை பேசுபவர்கள் நடைமுறைப்படுத்த முனைவர்கள் தொடர்பில் கடம் சட்டம் நடவடிக்கையெடுக்கப்படும் என்று அரசு தரப்பு Nபேசினாலும் மக்கள் இன்னும் அதன்மீது நம்பிக்கை கொண்டதாக தெரியவில்i.ஏனெனில் இனவாத அமைப்புக்களின் ஊடக மாநாடுகள் பகிரங்கமாக நடைபெறுவதுடன்,அதில பகிரங்கமாக ஏனைய மதத்தவர்கள் தொடர்பில் மிகவும் மோசமான அவதூறுகளும்,இட்டுக் கட்டல்களும் இல்லாமல் இல்லை.
இந்த அடிபப்டையில் வில்பத்துவில் முஸ்லிம்களின் குடியேற்றம் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல்களை பொதுபலசேனா உள்ளிட்ட அமைப்புக்கள் வெளியிடும் கருத்து எவ்வித அடிப்படைத்தன்மையற்றது என்பது எமதுஅமைப்பு மேற்கொண்ட ஆய்வின் மூலம் வெளிப்படுத்தவுளளது..குறிபபபாக இந்த லிலன்த பெரேரா என்பவரால் வெளியிடப்பட்டுள்ள மன்னார் முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என இன்று கூறுவது சிங்கள இனவாதிகளின் ஆக்கிரப்புக்கு இடப்படும் ஒரு அடித்தளம் என்பதை நாம் புரிந்து கொண்டுள்ளோம்.தமிழர்களின் பாரம்பரிய பூர்வீககாணிகளுக்குள் சிங்கள குடியேற்றங்களை மேற்கொள்ளல் அதில் ஒரு திடடமாகும்,அத்தோடு முஸலிம்கள் வாழ்ந்த காணிகளை அரசுடமையாக்கியதன் பின்னர் அதனை அவர்களது தேவைகளுக்காக எல்லையிடல் செய்வதும் அதில் ஒரு திட்டமாகும்.இதனால் தான் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்திற்கு எதிரான சக்திகளுக்கு அதிகமான சந்தரப்பத்தை வெளிப்படுத்த வழங்குவதும் நிகழ்ச்சி நிரலின பிரதானமானதாக உட்புகுத்தப்பட்டுள்ளது என்பதையும் எமது அமைப்பு தொடராக மேற்கொண்ட தகவல்திரட்டுக்களில் இருநு;து காணமுடிகின்றது.
வில்பத்துவில் முஸ்லிம் குடியேற்றம் இடம் பெறுவதாக இனவாத அமைப்புக்கள் கூறிய போதும்,அது பிழையான கருத்தூட்டல் என்பதை அ;மையில் இலங்கையில் ளிபரப்பான சிங்கள தொலைக்காட்சி விவாதமொன்றில் இலங்கையின் அமைச்சரான றிசாத் பதியுதீன் முன்வைத்த புவியியல் ரீதியான ஆதாங்கள் போதுமானது என்பதையும் நாம் அதனை பார்த்ததிலிருந்து புரிந்து கொள்ள முடிந்துள்ளது.
எது எவ்வாராக இருந்தாலும் எமது அமைப்பான சமூக நீதிக்கானதும்,மனிதத்துவத்துவத்துக்குமான இணைந்த கரங்கள்; அமைப்பு பொதுபலசேனா போன்ற இனவாத அமைப்புக்கள் தொடர்பில் அவதானித்துவருவதாகவும் பிழையான தகவல்கள் மூலம் எதனை நிரூபிக்க முற்படுகின்றார்கள் என்பதையும் வெளிப்படுத்துவதோடு,இது தொடர்பில் தேவையான ஆவணப்படுத்தல்களை தேவையான நாடுகளுக்கு வழங்குவது தொடர்பில் ஆரம்ப கட்ட பேச்சுக்களை ஆரம்பித்துள்ளதாகவும் அவர்களினால் வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கு மேற்கோளாக காட்டவிரும்புகின்றேன்.
Post a Comment