Header Ads



ஈரானுக்கான தூதுவரை, கட்டார் திருப்பியழைத்தது

ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்ளும் விதமாக அந்நாட்டிற்கான தனது தூதரை திரும்ப அழைப்பதாக கட்டார் அறிவித்துள்ளது.

முன்னதாக சவுதி அரேபியாவில், அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்தி வந்த, ஷியா பிரிவு மதகுரு உட்பட, 47 பேருக்கு, மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் பெட்ரோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தினர். இது தொடர்பாக 44 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனை அடுத்து சவுதி தூதரகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை கண்டித்து ஈரான் உடனான தூதரக உறவுகளை துண்டித்துக்கொள்வதாக சவுதி அறிவித்தது. தற்போது சவுதி ஆதரவு நாடான கட்டாரும் ஈரான் உடனான தூதரக உறவுகளை முறித்துக்கொள்வதாக அறிவித்துள்ளது.

இது தொடர்பான அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக இயக்குனர், காலித்- பின் இப்ராகிம் அல்-ஹாமர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ஈரான் தலைநகர் தெஹ்ரானில் உள்ள சவுதி தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலை கண்டித்து ஈரானில் இருக்கும் கட்டார் தூதரை திரும்ப அழைத்துள்ளோம்.” என்று தெரிவித்துள்ளார்.

4 comments:

  1. இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கும், வலுப்படுத்தலுக்குமான நல்லதொரு நகர்வு, துருக்கியும் முன்னின்று செயற்பட வேண்டும்.

    ReplyDelete
    Replies
    1. என்ன ஒற்றுமை? என்ன ஒழுங்கு? எல்லாமே அமெரிக்காவின் அஜண்டா தான். இந்த அரபிகள திருத்தவே முடியாது!. சதாம்,கடாபி,முர்சிகள் எங்கே? மன்னர் சல்மானும மிக விரைவில் காலாவதியாகுவார்.

      Delete
  2. ஈரான் இவ்வாறு துடிப்பது 46 பேர் கொல்லப்பட்டதற்கு அல்ல
    மாறாக அவர்களின் அடிவருடி நிம்ர் கொல்லப்பட்டதற்கு

    ReplyDelete

Powered by Blogger.