Header Ads



ஜே.வி.பி.யின் பௌத்த மதகுருமார், அமைப்பின் எச்சரிக்கை


பௌத்தமகா சங்கத்தினை கட்டுப்படுத்தும் தேவையற்ற சட்டங்களை நிறைவேற்ற அரசாங்கம் முயன்றால் ஏனைய பௌத்த மதகுருமாருடன் இணைந்து வீதி ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கப்போவதாக ஜேவிபியின் பௌத்தமதகுருமார் அமைப்பு தெரிவித்துள்ளது.

அரசாங்கம் அரசியல்வாதிகள் கட்டுப்பாட்டுடனும் ஓழுக்கத்;துடனும் நடந்துகொள்வதை உறுதிசெய்வதற்கான சட்டங்களை முதலில் கொண்டுவரவேண்டும். முதலில் ஆளும் தரப்பினர் தொடர்பில் அவ்வாறான சட்டங்களை கொண்டுவரவேண்டும்,பின்னர் பௌத்தமதகுருமார் தொடர்பில் கவனம் செலுத்தலாம்.

ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கங்கள் வரலாற்றுரீதியாக பௌத்தமதகுருமார்கள் குறித்து வெறுப்புணர்வுடனேயே நடந்துகொண்டுள்ளன,தற்போதைய அரசாங்கம் தனது மோசமான நடவடிக்கைகளிற்கு எதிராக பௌத்தமதகுருமார் திரண்டுடெழுவதை தடுப்பதற்காக அவர்களை கட்டுப்படுத்த முயல்கின்றது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.