'சிங்ஹ லே' என்கிற இனவாத பிரச்சாரம் - எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம்..!
/SNM.Suhail/
நாட்டில் இனந்தெரியாத குழுவொன்றினால் முன்னெடுத்துச்செல்லப்படும் 'சிங்ஹ லே' என்கிற இனவாத பிரச்சாரம் குறித்து அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
'சிங்ஹ லே' இனவாத பிரசாரம் குறித்து முஸ்லிம்கள் கொண்டுள்ள அச்ச நிலைமை தொடர்பில் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் பாதுகாப்பு அமைச்சின் கவனத்திற்கு கொண்டு வந்த போதே இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தன இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் Vi க்குக் கருத்துத் தெரிவிக்கையில்,
இனந்தெரியாக குழுவொன்று இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்கின்றது. இது நல்லாட்சி அரசாங்கத்திற்கு சவால் விடும் முகமாக திறைமறைவிலிருந்து செயற்படுகின்றனர். இது எதிர்காலத்தில் ஆபத்தை ஏற்படுத்தலாம் என்கிற அச்சம் நிலவுகின்றது.
கடந்த 2015 ஜனவரி 8 ஆம் திகதி மக்கள் இனவாதத்தை தேற்கடித்தனர். புதிய அரசானது இனவாத செயற்பாடுகளை எதிர்க்கும் தேசப்பற்றுள்ள மக்களால் உருவாக்கப்பட்டதாகும். அரசாங்கத்துடன் சவால் விடுவதற்காக சில அமைப்புக்கள் 'சிங்ஹ லே' என்கிற கோசத்துடன் களமிறங்கியுள்ளன. இந்தக் கும்பல் அச்சம் காரணமாக நேரடியாக களமிறங்காது திரை மறைவிலிருந்து செயற்படுகின்றனர்.
இந்தப் பிரசார நடவடிக்கையானது திட்டமிட்ட செயற்பாடாகும். இதற்கு பின்னால் பலமான சக்திகள் இயங்கலாம் என ஊகிக்க முடிகின்றது.
சமூக வலைத்தளங்கள் மூலமாகவே இப்பிரசார நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எனவே இது குறித்து தொலைத்தொடர்பு மற்றும் நவீன தொழிநுட்ப உட்கட்டமைப்பு அமைச்சரான ஹரீன் பெர்ணான்டோவின் கவனத்திற்கு கொண்டு வந்தேன். அத்துடன் நேற்றைய தினம் இவ்விடயம் குறித்து பாதுகாப்பு அமைச்சரை தொடர்புகொண்டு தெரிவித்தேன்.
இதன்போது பாதுகாப்பு அமைச்சர் , ''இனவாதப் பிரச்சாரமாக முன்னெடுக்கப்படும் 'சிங்ஹ லே' விவகாரம் குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த இனவாத பிரச்சாரம் குறித்து நாம் கூடிய கவனம் செலுத்தி வருகின்றோம். இனவாத பிரச்சாரம் மேற்கொள்பவர்கள் திரை மறைவிலிருந்து செயற்படுகின்றமையால் இது குறித்து பாதுகாப்பு அமைச்சு ஆராய்ந்து வருகின்றது. முழுமையான அறிக்கை விரைவில் தயாரிக்கப்படும்.
நாட்டில் இனவாதத்தை தூண்டும் விதமாக செயற்படும் குறித்த கும்பலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் இந்த நடவடிக்கைகள் குறித்து பொது பல சேனா அமைப்பினர் மீது சந்தேகம் நிலவுகின்றது '' என என்னிடம் கூறினார் என முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
அத்துடன், இவ்விவகாரம் தற்போது மிக தீவிரமாக முன்னெடுக்கப்படுவதை சில பஸ், முச்சக்கர வண்டி மற்றும் கார்களில் 'சிங்ஹ லே' என்னும் ஸ்டிகர்கள் ஒட்டப்பட்டிருப்பதை காணக்கூடியதாக உள்ளன.
இதற்கு உடனடியாக அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அரசாங்கத்துக்கு தொடர்ந்தும் அழுத்தம் கொடுக்கவுள்ளேன்.
அது மாத்திரமின்றி இன்றைய தினம் பாதுகாப்பு அமைச்சர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கு இதுகுறித்து உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கடிதமொன்றை கையளிக்கவுள்ளேன்.
இதேவேளை நேற்றைய தினம் நுகேகொட பகுதியிலுள்ள முஸ்லிம் வீட்டொன்றின் நுழைவாயிலில் பெயின் மூலம் 'சிங்ஹ லே' எழுதியிருக்கின்றனர்.
ஆண்கள் துணையற்ற பெண்கள் மட்டும் வசிக்கும் குடும்பமென்பதால் அவர்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.
இவ்வாறான செயற்பாடுகளானது மீண்டு பதற்ற சூழ்நிலைகளை ஏற்படுத்திவிடுமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்துகின்றது என முஜிபுர் ரஹ்மான் மேலும் தெரிவித்தார்.
MR.கூட்டம் செய்த தப்புகலை மரைக்க செய்யும் திட்டம் சிங்களெ ஆட்ச்சியை பிடிக்க தடுமாட்டம் இன்த அரசு உசார் ஆகணும் அல்லாஹ் துணை எம்க்கு
ReplyDeleteWhere is Mr.SLMC leader? why he is not bother this racist move? why he is call himself as Muslim leader?
ReplyDeleteஎங்கே ஆஸாட் சாலி?
ReplyDeleteஎங்கே ரிசாட்?
குட்டை குழம்புகிறது மீன் பிடிக்கும் சந்தர்பம்.
காசி இல்லாத ஓசி விளம்பரம் இனி கானலாம்.