கத்தார் நாட்டு முன்னாள் மன்னருக்கு, சுவிட்சர்லாந்தில் அபராதம்
சுவிட்சர்லாந்து நாட்டில் அவசர சிகிச்சை மேற்கொள்ள 9 விமானங்களில் பயணம் செய்து வந்த கத்தார் நாட்டு முன்னாள் மன்னருக்கு விமான நிலைய அதிகாரிகள் அபாரதம் விதித்துள்ளனர்.
கத்தார் நாட்டு மின்னாள் அமீரான(மன்னர்) Sheikh Hamad bin Khalifa (63) தன்னுடைய ராஜப்பட்டாளங்களுடன் மோரோக்கோ நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளார்.
சுற்றுலாவில் ஈடுப்பட்டிருந்தபோது அமீருக்கு கால் முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து சுவிட்சர்லாந்து நாட்டில் சிகிச்சை மேற்கொள்ள கடந்த டிசம்பர் 26ம் திகதி புறப்பட்டுள்ளனர்.
அதாவது, ஒன்றன்பின் ஒன்றாக 9 விமானங்களில் புறப்பட்டுள்ளனர். இந்த பயணம் குறித்து சுவிஸின் சூரிச் மாகாணத்தில் உள்ள Kloten விமான நிலையத்திற்கு அவசர தகவலும் அனுப்பியுள்ளனர்.
எனினும், அரண்மனைக்கு சொந்தமான 9 விமானங்களும் தரையிறங்க விமான நிலையத்தை தயார்ப்படுத்த முடியாத சூழல் ஏற்பட்ட ஒவ்வொரு விமானமும் குறிப்பிட்ட நேரத்தில் தரையிறங்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமில்லாமல், Kloten விமான நிலையத்தில் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் விமானங்கள் புறப்படவும், தரையிறங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏனெனில், இந்த நேரங்களில் விமானங்களில் இருந்து வெளிப்படும் இரைச்சல் அருகில் உள்ள பொதுமக்களுக்கு தடையாக இருக்கிறது என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், விமான நிலையத்திற்கு முதலில் வந்த 3 விமானங்களும் இரவு நேரத்திலேயே வந்து இறங்கியுள்ளது.
பின்னர், அமீருரை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. தற்போதும் அமீர் சூரிச்சில் வசித்து தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், 3 விமானங்கள் தரையிறங்குவதற்கு, பார்க்கிங் செய்ததற்கு மற்றும் இரவு நேரத்தில் இரைச்சல் ஏற்படுத்தியதற்காக மொத்தமாக 13,940 பிராங்க் செலுத்த வேண்டும் என விமான நிலைய அதிகாரிகள் அமீருக்கு தகவல் அனுப்பியுள்ளனர்.
எனினும், எஞ்சிய விமானங்களின் கட்டணம் குறித்து தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விமானப்பயணம் மேற்கொண்டதற்கு ஆன செலவினை விட, பார்க்கிங் செய்ததற்கு கூடுதல் செலவு ஆகவுள்ளதாக கத்தார் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆடம்பரத்தை துறந்து எளிமையைக் கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்ற இஸ்லாமிய மார்க்கத்தை இவர்கள் பின்பற்றுகின்ற இலட்சணம் பாரீர்!
ReplyDeleteவிதிக்கப்பட்டது அபராதமல்ல... கட்டணம் மாத்திரமே. அபராதம் என்றால் குற்றத்துக்கும் விதிக்கும் தண்டப் பணம் அல்லவா? இந்த சம்பவத்தில் மேலதிக சேவைக்காக மேலதிக கட்டணம் அறவிட்டிருக்கிறார்கள். அவ்வளவு தான்.
ReplyDelete