பகிரங்கமாகியது குழப்பம்
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை பகிஸ்கரிக்கத் தீர்மானித்துள்ளனர்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர விமர்சனம் செய்த காரணத்தினால் இவ்வாறான நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்ய ஒரு வாக்கையேனும் அளிக்காதவர்கள் அமைச்சுப் பதவியை பெற்றுக்கொண்டு அரசாங்கத்தை விமர்சனம் செய்கின்றனர் என அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இவ்வாறு அரசாங்கத்தை விமர்சனம் செய்ய அனுமதிக்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு வெளிவிவகார அமைச்சர் குற்றம் சுமத்திய போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் கூட்டத்தில் பங்கேற்றிருந்த போதும், எதனையும் பேசவில்லை.
கூட்டத்தின் இறுதியில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள்; தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
இந்த விடயம் குறித்து ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணுவது என இணங்கியுள்ளனர்.
அவ்வாறு தீர்வு காணும் வரையில் ஆளும் கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை பகிஸ்கரிப்பது என சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தீர்மானித்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
உண்மைய சொன்னா கசக்கும்
ReplyDeleteMangala is right .
ReplyDelete