Header Ads



இனவாதிகள் சிங்களத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பவர்கள் அல்ல - அர்ஜூன

இந்த நாட்டிற்காக முன்னாள் ஜனாதிபதி சந்திரக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், ரணில் விக்ரமசிங்கவும் மிகப் பெரிய அர்ப்பணிப்பினை செய்துள்ளனர். ஆனால் நாட்டில் மீண்டும் இனவாதத்தை தூண்டும் தரப்பினரே கறுப்புக்கொடிகளை ஏற்ற முயற்சிப்பதாக அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

மகர பிரதேசத்தில் இன்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் பேசும் போதே அவர இதனை கூறியுள்ளார்.

இனவாதத்தை தூண்டும் நபர்களில் அமைச்சர் பதவிகளை எதிர்பார்துள்ளவர்களும் இருக்கின்றனர். மக்கள் ஒருபோதும் கறுப்புக்கொடிகளை ஏற்ற மாட்டார்கள்.

இனவாத பிரிவினர் மீண்டும் எழுச்சிப் பெற்று வருகின்றனர். இந்த இனவாதிகள் சிங்களத்துவத்தையும் பௌத்த மதத்தையும் பாதுகாப்பவர்கள் அல்ல. நாட்டை மீ்ண்டும் யுத்தத்தை நோக்கி கொண்டு செல்வதே இவர்களின் தேவை. அரசியல்வாதிகளே கடந்த காலத்தில் யுத்தத்தை ஏற்படுத்தினர்.

தற்போது வடக்கு, தெற்கு என்று பார்ப்பதில்லை. இன மற்றும் மதவாதங்கள் இன்றி முன்நோக்கி செல்லக் கூடிய சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனினும் நாடாளுமன்றத்திற்கும் மாகாண சபைகளுக்கும் வந்து அமைச்சு பதவிகளை பெற முயற்சிக்கும் இனவாதத்தை தூண்டும் நபர்களுக்கு இதில் விருப்பமில்லை. அந்த குழுவினரே கறுப்புக்கொடியை ஏற்ற முயற்சித்து வருகின்றனர்.

ஜனவரி 8 ஆம் திகதி பெற்றுக்கொண்ட வெற்றி மிகவும் சுவிஷேமான வெற்றியாகும். இந்த வெற்றிக்கு பல உரிமையாளர்கள் இருப்பதை தற்போது கண்கின்றோம்.

எனினும் இந்த திட்டம் மூன்று வருடங்களுக்கு முன்னர் தொடங்கப்பட்டது. முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்கவே இதற்கு தலைமை தாங்கினார். அவர் தனது பெயரை பிரபலப்படுத்த விரும்பும் நபர் அல்ல. எனினும் இன்று இந்த வெற்றிக்கு பல உரிமையாளர்கள் உள்ளனர்.

அதேபோல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தேர்தலில் நிறுத்திய போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாரிய அர்ப்பணிப்பை செய்தார். ஐக்கிய தேசியக் கட்சி பெரிய அர்ப்பணிப்பை செய்தது.

ரணில் விக்ரமசிங்க தனக்கு கிடைத்த இரண்டாவது ஆணையையும் நாட்டுக்காக அர்ப்பணித்தார்.

தனக்கு கிடைத்த சந்தர்ப்பத்தை விட்டுக்கொடுத்து விட்டு, பொது வேட்பாளராக மைத்திரிபால சிறிசேனவை தேர்தலில் களமிறக்க ஒத்துழைப்பு வழங்கினார் எனவும் அமைச்சர் அர்ஜூன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.