Header Ads



மகனுக்கு பதிலாக என்னை, சிறை பிடித்திருக்கலாம் - மகிந்த உருக்கம்

தனது மகனுக்கு பதிலாக தன்னை சிறை பிடித்திருந்தால் அது சிறந்த விடயம் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அவரது புதல்வர் யோஷித ராஜபக்ஸவை பார்வையிடுவதற்காக வெலிகடை சிறைச்சாலைக்கு வருகைத் தந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அரசியல்வாதிகளிடம் பழிவாங்கினால் பரவாயில்லை என தெரிவித்த மஹிந்த ராஜபக்ஸ, பிள்ளைகளை பழிவாங்குவது தவறான விடயம் என கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் தொடர்பிலான வழக்கில் டொக்டர் ஒருவர் பங்குதாரராக இருப்பதாகவும், அரசாங்கம் அவரை அச்சுறுத்தி யோஷிதவின் பெயரை உள்வாங்கியிருப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் பலர் சுகயீனமுற்றுள்ளதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, அவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை எனவும் கவலை தெரிவித்துள்ளார்.

7 comments:

  1. இது புதுசா இருக்கே

    ReplyDelete
  2. குற்றம் செய்தவர்தான் தண்டனை அனுபவிப்பது ஒன்றுமரியா அப்பாவியை கைது செய்ததுபோல் பிதற்ருகின்றார் கைதாகி அடுத்த நாள் நோயாளியாவது அதிசயமான விடயமில்லையே அய்யா...

    ReplyDelete
  3. இளம் வயது உன் மகனுக்கு சுகயீனமா? அரசியல் வாதிகளின் பெயரை பாவித்து அவர்களின் மக்கள் தீயதை செய்கிறார்கள் அதற்காகத்தான் அவர்களை பிடிப்பது ஆனால் நீங்கள் செய்ததற்கு வேறாக உங்களுக்கு வரும்.

    ReplyDelete
  4. அவசரப்படாதீங்க அங்கிள். நீங்களும் உள்ளே போவீங்க.

    ReplyDelete
  5. In your time, not only you , your family and all your distant
    family members were busy , very busy due to only one reason
    and that was because you were the man in the driving seat. Just
    tell us , if that was not the case where would they all have
    been ? Now you need to get busy trying to save all of them from
    their deeds ! So , you can not retire respectfully ! You know
    what you did with your politics . There's always rewards for
    achievements and punishments for wrongdoings.

    ReplyDelete
  6. இனிமேல் உங்களுக்கு பசி வந்தால் மகனுக்கு உணவு கொடுத்தால் OK va சார் ?

    ReplyDelete
  7. இப்படிக் கூறுவதன் மூலம் ஏதோ இவர்கள் குடும்பமே உத்தம புத்திரர்கள் என்றும் கைது செய்யப்பட்டது ஒரு பழிவாங்கல் நடவடிக்கை என்பதுபோலவும் உலகிற்கு காண்பிக்க முயல்கின்றார். உங்களையெல்லாம் பழிவாங்குவதற்கு நல்லாட்சி அரசு நினைத்திருந்தால் கடந்த வருடம் ஜனவரி 9 இரவே கூண்டோடு கைதுசெய்து சிறைக்குத் தள்ளியிருக்க முடியும்.

    ஐயா முதியவரே, நீங்கள் இப்படியெல்லாம் ஏமாற்றுவதற்கு இலங்கையரும் உலகமக்களும் உங்களுடைய மிருகக் குருதி ஸ்டிக்கர் ஒட்டும் முட்டாள்களல்ல..!

    ReplyDelete

Powered by Blogger.