சிங்களே அமைப்பை, தடை செய்யுங்கள் - சுகாதார தொழிற்சங்க சம்மேளனம்
சிங்களே அமைப்பினை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிங்களே, தமிழே அல்லது முஸ்லிம்லே போன்ற எந்தவொரு இனவாத அமைப்புக்களும் அவசியமில்லை என சம்மேளனத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்துள்ளார்.
71 மற்றும் 81ம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் பல்வேறு இரத்த ஆறுகள் ஓடியதாகத் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்த காலமாக யுத்தம் செய்திருந்தோம் எனவும், இனியும் யுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்க லே காரர்கள் இரத்தக் காட்டேறிகள் போல் தெரிகிறது! அவமானச் சின்னங்கள!
ReplyDeleteபுத்த பிரான் இந்நாட்டில் தற்போது இருந்தால் அவர் இரத்தக் கண்ணீர் வடித்திருப்பார்!