அப்பிளுக்கு எதிராக, டொனால்ட் டிரம்ப்
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப் தான் அதிபரானால் ஆப்பிள் நிறுவனம் தனது தயாரிப்புகளை அமெரிக்காவில் மட்டுமே மேற்கொள்ளவேண்டும் என்று வலியுறுத்துவேன் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டின் இறுதியில் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது.
இதையொட்டி பலரும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த திங்களன்று லிபர்டி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் கலந்துகொண்டார் பேசினார்.
அப்போது, அவர் ஆப்பிள் நிறுவனம் தனது கணினி மற்றும் மொபைல் தயாரிப்புகளை அமெரிக்காவிலேயே மேற்கொள்ளவேண்டும் என்று கூறினார்.
மேலும் ஃபோர்ட்(Ford) போன்ற நிறுவனங்கள் குறித்தும் அவர் பேசினார்.
சுதந்தரமான வர்த்தகம் என்பது நல்லது தான். ஆனால் அமெரிக்க நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை அமெரிக்காவில் மேற்கொள்ளவில்லை என்றால் நமக்கென்று நாடு இல்லாமல் போகும் என்று கூறினார்.
எனினும் அவரது பேச்சு வெற்று வாக்குறுதி என்று Gizmodo என்ற இணையப்பக்கம் விமர்சித்துள்ளது.
மேலும், ஒரு நிறுவனம் வெளிநாடுகளில் தனது உற்பத்தியை மேற்கொள்வதை தடுக்கும் அதிகாரம் அமெரிக்க அதிபருக்கு இல்லை என்றும் அந்த பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, ஆப்பிள் மட்டுமல்லாது அமேசான், கூகுள், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்கள் கூட தங்களது பொருட்களை தயாரிப்பதற்கு சீனாவில் உள்ள தொழிற்சாலைகளை பயன்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment