Header Ads



ஜனாதிபதி மைத்திரிக்கு நன்றி தெரிவித்து, பொதுபல சேனா அனுப்பியுள்ள கடிதம்..!

பொதுபல சேனா அமைப்பினால் நன்றி தெரிவித்து ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதாவது இலங்கையில் பசு வதையைத் தடுக்க ஜனாதிபதி சட்டநடவடிக்கை எடுப்பதற்கு ஆலோசனைகள் வழங்கியதற்காகவே அந்த அமைப்பு சார்பாக இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் இந்த சட்டநடவடிக்கையினை உடனடியாக அமுல்படுத்துமாறும் பொதுபல சேனா கோரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையில் பசு வதையைத் தடுக்க நிதி அமைச்சுக்கு தாங்கள் ஆலோசனை வழங்கியுள்ளதாக ஊடகங்கள் மூலம் அறிந்துக் கொண்டோம். 

தங்களது இந்தக் கோரிக்கைக்கு அரசாங்கத்திற்குள் கடும் எதிர்ப்பு உள்ளதாகவும்,கொழும்பு மாநகர சபையின் நகர பிதா முஸம்மில், அமைச்சர் கபீர் ஹாசிம் ஆகியோரால் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் மலிக் சமரவிக்ரம ஊடாக நிதி அமைச்சருக்கு இந்த பசுவதை சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டாமென கூறியுள்ளதாகவும் எங்கள் அமைப்பு அறிந்துக் கொண்டுள்ளது.     

இனவாதம்,மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி வெற்றிக் கொண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட தாங்கள் இன்று மாட்டிறைச்சியை உண்ணும் முஸ்லிம்கள் பக்கம் சார்பாக பேசிவிடுவீர்களோ என்று கவலையாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

நாட்டை சிறந்த முறையில் வழிநடத்த மக்கள் தங்களுக்கு வாக்களித்த வெற்றியடையச் செய்துள்ளனர். அதேபோல் தங்களது தேர்தல் விஞ்ஞாபனத்தில் ”மிருக வதையைத் தடுப்பதற்கு வேண்டிய சட்டதிட்டங்களை உடனயாக மேற்கொள்ளுவோம்” என்று 26ஆம் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளமைக்கு அமைய அதை நடைமுறைப்படுத்தம் வரை மக்கள் காத்துக் கொண்டிருப்பதாகவும் அந்தக் கடித்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன் எந்தவொரு மதமும் மிருக வதையை அனுமதிக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளதோடு மஹிந்தவின் ஆட்சியின் போதும் இந்த மிருகவதையை தடுக்கக் கோரி பல தரப்பினராலும் கையொப்பமிடப்பட்ட மனுக்கள் பல அனுப்பியும்,பாதயாத்திரைகளை மேற்கொண்டும் எந்தப் பயனும் கிடைக்கவில்லை. 

எனினும் தாங்கள் இந்த மிருகவதையை தடுக்க வேண்டிய சட்டதிட்டங்களை நடைமுறைப்படுத்த நிதி அமைச்சருடன் கலந்தாலோசனைகளை மேற்கொண்டமையானது திருப்தியளிக்கும் விடயமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

அத்துடன் விவசாயத்திற்கு தேவையான உரத்தினைப் பெற்றுக் கொள்ளவும், தூய பசும்பாலை எதிர்கால சந்ததியினர் அருந்துவதற்குமாவது இந்த மிருகவதையை தடுக்கவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரியுள்ளனர். 

மேலும் தங்களால் எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கைக்கு சந்திரிக்கா பண்டாரநாயக்க,மஹிந்த ராஜபக்ஸ, ரணில் விக்கிரமசிங்க,ஆர்.சம்பந்தன் மற்றும் கரு ஜெயசூரிய உள்ளிட்ட தலைவர்களும் பக்கபலமாக இருப்பது எங்கள் அமைப்பிற்கு நம்பிக்கைத் தருவதாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். 

அதேபோல் மாகாணசபைகளுக்கும் மிருகவதையைத் தடுக்கக்கூடிய அதிகாரங்களை வழங்குமாறும் கோரியுள்ளனர். 

எங்கள் அமைப்பைப் போன்று மிருகங்களை தெய்வமாக வழிபடும் இந்த மத தலைவர்களும், இந்து மத அமைப்புகளும் இந்த மிருகவதைக்கு எதிராக குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் கோரிக்கை விடுத்து ஜனாதிபதிக்கான கடிதத்தினை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. இதில் ஒன்றை கூற மறந்துவிட்டார் அதாவதுஅறுக்கப்படாமல் கட்டாக்காலியாக திறியும் மாடுகளை நாங்கள் மேய்ப்போம் சமபளம் இல்லாமல்

    ReplyDelete
  2. எல்லா இனமும் உண்ணும் உணவு உங்கள் காவி உடை சகோதர்கள் சிலருக்கு பாபத் கொடுத்த அனுபவம் உண்டுங்க அவர்கலும் இதில் அடங்குவர்

    ReplyDelete
  3. கொத்துக் கொத்தாக மனிதர்களை கொன்று குவித்த நமக்கு திடீரென மாட்டின் மீது ஏன் அனுதாபம்?

    ReplyDelete
  4. President was elected with muslims votes.

    ReplyDelete

Powered by Blogger.