Header Ads



கனேடிய பிரதமரின், உயிருக்கு ஆபத்து

கனேடிய பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை கடத்தி கொலை செய்ய திட்டம் தீட்டிய நபர் ஒருவரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஓண்டாரியோ நகரை சேர்ந்த ஜேம்ஸ் மார்ட்டின்(57) என்ற நபர் கடந்த ஞாயிறு அன்று ஒட்டாவா நகரில் இருந்து ரொறோன்ரோ நகருக்கு ரயில் பயணம் செய்துள்ளார்.

அப்போது, ரயில் இருக்கையில் அமர்ந்து வந்த ஜேம்ஸ் ஒரு மர்ம நபரை கைப்பேசியில் தொடர்புக்கொண்டு ரகசியமாக பேசியுள்ளார்.

நபரின் நடவடிக்கை சந்தேகமாக இருந்ததால், அவரை சக பயணிகள் கூர்ந்து கவனித்து வந்துள்ளனர்.

சில நிமிடங்களில், கைப்பேசி வழியாக மற்ற நபரிடம் உரக்க கத்தி பேசியுள்ளார்.

அப்போது, பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அவரது குடும்பத்தினரை கடத்தி சென்று கொலை செய்யப்போவதாக அவர் கத்தியதாக கூறப்படுகிறது.

இதுமட்டுமில்லாமல், பெண் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரையும் கொல்ல அவர் திட்டம் தீட்டியதாக கூறப்படுகிறது.

நபரின் பேச்சால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

விரைந்து வந்த பொலிசார் ரயிலை Cobourg நகரில் தடுத்தி நிறுத்தி, சதி திட்டம் தீட்டிய அந்த நபரை உடனடியாக கைது செய்து ரயிலில் இருந்து வெளியேற்றினர்.

மேலும், ரயிலில் ஏதாவது ஆபாத்தான வெடிப்பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது என பொலிசார் பரிசோதனை செய்தபோது எதுவும் கிடைக்கப்பெறவில்லை.

செவ்வாய் கிழமை அன்று நபர் மீது வழக்கு பதிவு செய்த பொலிசார், புதன்கிழமை அன்று அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இந்த சம்பவம் தொடர்பாக பிரதமர் அலுவலகம் இன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில், ‘பிரதமர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அளிப்பதில் பொலிஸ் துறையினர் மீது முழு நம்பிக்கை உள்ளது. எனவே, இந்த சம்பவம் குறித்து மேலும் கருத்து கூறவில்லை’ என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.