Header Ads



நல்லாட்சி அரசாங்கம் அநீதியிழைக்கிறது - ரஞ்சன் குற்றச்சாட்டு

உலக வரலாற்றில் என்றுமில்லாதவாறு எண்ணெய் விலை குறைந்துள்ள நிலையில், அதனை அனுபவிக்கும் வாய்ப்பானது எமது மக்களுக்கு வழங்குவது அரசின் கடமை என ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஒரு பீப்பாய் கச்சாய் எண்ணெயின் விலை உலக சந்தையில் குறைந்திருக்கும் நிலையில், அதன் நன்மை எமது நாட்டு மக்களுக்கு கிடைத்துள்ளதா? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

62 இலட்சம் மக்கள் வாக்களித்து புதிய அரசாங்கத்தை உருவாக்கியிருப்பது இவ்வாறான நன்மைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தான் என்றும் அவர் கூறினார்.

ஆனால், இந்த மாதிரியான நன்மைகளை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்காமல் நல்லாட்சி அரசாங்கம் அநீதி இழைப்பதாகவும் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குற்றஞ் சுமத்தியுள்ளார்.

மேலும், கடந்த கால அரசாங்கம் செய்த தவறை நல்லாட்சியும் செய்வது என்றால் மக்கள் நல்லாட்சியை தெரிவு செய்ததற்கான நன்மை மக்களுக்கு இல்லை என்றும் தெரிவித்ததோடு ஜனாதிபதியும், பிரதமரும் மக்கள் மீது அன்பு, அக்கறைக் கொண்டவர்களாகவே உள்ளனர்.

எனவே, வெளிநாடு சென்றுள்ள பிரதமர் நாடு திரும்பியதும் எண்ணெய் விலையை குறைத்து மக்களுக்கான வரப்பிரசாதத்தைப் பெற்றுக் கொடுப்பார் என தாம் நம்புவதாகவும் தெரிவித்துள்ள அவர் தான் எப்போதும் மக்கள் பக்கமே நிற்பதாகவும், அதற்காக தாம் போராட தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.