அச்சுறுத்தும் சிகா
பிரேசிலில் சிகா வைரஸ் தொற்றிய தாய்மாருக்கு வழக்கத்திற்கு மாறாக சிறு தலையுடன் குழந்தை பிறக்கும் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் தொடக்கம் சிறிய தலை கொண்ட குழந்தைகள் பிறந்த 3,898 சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த திடீர் வைரஸ் தொற்றினால் 3,500க்கும் அதிகமானவர்கள் பாதித்திருப்பதாக அதிகாரிகள் கடந்த வாரம் அறிவித்திருந்தனர்.
சிகா வைரஸ் எடேஸ் எகிப்டி நுளம்புகளால் பரவுவதோடு இது டெங்கு மற்றும் கிகுன்குன்யாவையும் பரப்புகிறது. இதில் பாரிய எண்ணிக்கையில் சிகா வைரஸ் தொற்றிய அனுபவத்தை பிரேஸில் பெற்றுள்ளது.
ஏற்கனவே இந்த வைரஸால் பிரேஸிலில் ஐந்த குழந்தைகள் இறந்துள்ளன. மேலும் 44 மரணங்கள் சிகாவினால் ஏற்பட்டதா என்பது குறித்த ஆய்வு நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
சிறுவர்களிடம் இந்த மூன்று வைரஸ்களில் ஒன்று வேகமாக தொற்றுவது அண்மையில் கண்டறியப்பட்டிருப்பதாக பிரேஸில் சுகாதார அமைச்சர் மார்சிலோ காஸ்ட்ரோ கடந்த வாரம் கூறி இருந்தார்.
சிகா வைரஸிற்கு தடுப்பு மருந்தொன்றை மேம்படுத்த மேலதி நிதி கோரப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய சூழலில் சிகாவை தடுக்க நுளம்பு பரவும் நிர் நிலைகளை சுத்தப்படுத்தும் நடவடிக்கையையே அரசு மேற்கொண்டு வருகிறது.
ஏனைய லத்தீன் அமெரிக்க நாடுகளிலும் இந்த வைரஸ் வேகமாக பரவி வருகிறது.
Post a Comment