யேமனில் போர்நிறுத்தம் முறிவு - சவூதி
யேமனில் சவூதி கூட்டுப் படைக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமையுடன் முடிவுக்கு வந்ததாக சவூதி தரப்பில் அறிவிக்கப்பட்டது.
இதுகுறித்து சவூதி தலைமையிலான கூட்டுப் படை தலைமையகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
யேமனில் அறிவிக்கப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் சனிக்கிழமை மதியம் 2 மணியுடன் (உள்ளூர் நேரம்) முடிவுக்கு வருகிறது.
கடந்த மாதம் 15-ஆம் தேதி போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, ஹூதி கிளர்ச்சியாளர்கள் அந்த ஒப்பந்தத்தை மீறி வருகின்றனர்.
எல்லைக்கு அப்பாலிருந்து சவூதி அரேபிய மக்கள் மீது எறிகுண்டுகளை வீசித் தாக்கி வருகின்றனர். போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பயன்படுத்தி, யேமன் பொதுமக்கள் மீது கிளர்ச்சியாளர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டுள்ளனர்.
எனவே, போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர கூட்டுப் படை முடிவு செய்தது என்று சவூதி கூட்டுப் படை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Post a Comment