காதியானிகளை அங்கீகரித்து ஜனாதிபதியோ, பிரதமரோ எந்த காரியங்களையும் செய்யக்கூடாது - ரிஸ்வி முப்தி
கொழும்பு மாவட்ட மஸ்ஜித் சம்மேளனம், நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசல்,
ஆகியவற்றுடன் இணைந்து ’’அகில இலங்கை ஜம்மிய்யதுல் உலமா’ ஏற்பாடு செய்த
’இறுதி நபித்துவத்தை பாதுகாக்கும் மாநாடு நீர்கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் உரையாற்றிய ஜம்மியதுல் உலமாவின் தலைவர் ரிஸ்வி முப்தி கூறியதாவது,
ஜனாதிபதியோ, பிரதமரோ, இந்த அரசாங்கமோ முஸ்லிம் என்ற அடையாளத்திற்குள் காதியானிகளை அங்கீகரித்து எந்த காரியங்களையும் செய்யக்கூடாது என்றார்.
இந்த மாநாட்டில் ஆர் ஆர் டி இயக்கத்தின் அனுசரணையுடன் வெளியிடப்பட்ட ’அஹமதி காதியானிகள் ஏன் முஸ்லிம்கள் அல்லர்’ என்ற நூலை ஆர் ஆர் டியின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்டீன் வெளியிட்டு வைத்தமை குறிப்பிடத்தக்கது.
அப்ப ஜமாலி கப்ர்கள் இது அல்லாஹ் கேட்பான் கியாமத் நாளில்
ReplyDelete