தீவிரவாதிகளுடன் நரேந்திர மோடிக்கு தொடர்பு - திரிணாமூல் காங்கிரஸ்
தீவிரவாதிகளுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இத்ரிஸ் அலி கூறியுள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
பிரதமர் மோடிக்கும் தீவிரவாதிகளுக்கும் தொடர்பு உள்ளது. பிரதமர் மோடி சமீபத்தில் பாகிஸ்தான் சென்று திரும்பிய பிறகு பதன்கோட் விமானபடை தளத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி உள்ளது மோடியின் பாகிஸ்தான் பயணம் குறித்து சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தீவிரவாதிகளுடன் பிரதமர் மோடிக்கு தொடர்பு இருப்பதாக திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இத்ரிஸ் அலி கூறிய கருத்திற்கு பாரதீய ஜனதா தனது கடும் கண்டத்தை தெரிவித்துள்ளது.
Post a Comment