ராயப்பு ஜோசப் பதவி துறந்தார்
திருச்சபை சட்ட எண் 401 பகுதி 1க்கு அமைவாக, மன்னார் ஆயர் ராயப்பு ஜோசப்பின் பதவித்துறப்பை பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் ஏற்றுக்கொண்டுள்ளார்.
இலங்கைக்கான அபோஸ்த்தலிக்க தூதுவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
மன்னார் மறைமாவட்டத்திற்கு புதிய ஆயர் நியமிக்கப்பட்டு அவர் பொறுப்பை ஏற்கும் வரை திருகோணமலை மறைமாவட்டத்தின் இளைப்பாறிய ஆயர் ஜோசப் கிங்ஸிலி சுவாம்பிள்ளையை மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக பாப்பரசர் பிரான்சிஸ் நியமித்துள்ளார்
இலங்கை நேரப்படி இன்று (14) மாலை 4.30 மணி அளவில் வத்திகானில் இருந்து இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட குரு முதல்வர் விக்டர் சூசை தெரிவித்தார்.
இந்த நியமனத்தின் பின்னர் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் இடம்பெற்ற விசேட திருப்பலியின் ஊடாக மன்னார் மறைமாவட்டத்தின் அப்போஸ்த்தலிக்க பரிபாலகராக ஜோசப் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார்.

Why did he resign his spiritual post? Any change in his life like Restinger, Ex pope?
ReplyDelete