முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கிறேன் - அகில இலங்கையில் சாதனை படைத்த மாணவன் ஆகீல் (படங்கள்)
-இக்பால் அலி-
2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சைக்கு தோற்றிய குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூயில் ஆங்கில மொழியில் வர்த்தகப் பிரிவில் கல்வி பயின்ற மாணவன் பழீல் முஹமட் ஆகீல் முஹமட் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப்பெற்று சாதனை படைத்துள்ளர்
இன்று வெளியான 2015 ஆம் ஆண்டுக்கான க. பொ. த. உயர் தரப் பரீட்சை பெறு பேற்று அடிப்படையில் குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூhயில் ஆங்கில மொழியில் வர்த்தகப் பிரிவில் தோற்றிய பழீல் முஹமட் ஆகீல் முஹமட் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடததைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
இவர் ஆரம்பக் கல்வியை முதலாம் ஆண்டு முதல் ஐந்தாம் ஆண்டு வரை வயம்ப ரோயல் கல்லூரியிலும், ஆறாம் ஆண்டு முதல் க. பொ. த. சாதாரணம் வரை ரோயல் சர்வதேசப் பாடசாலையிலும், க. பொ. த. உயர் தரக் கல்வியை குருநாகல் மலிய தேவ ஆண்கள் கல்லூரியிலும் கல்வி பயின்றவர். ஆகீல் கருத்துத் தெரிவிக்கையில்,
நான் அகில இலங்கை மட்டத்தில் முதலாம் இடத்தைப் பெற்றுக் கொள்வேன் என்று எதிர்பார்க்கவில்லை. நான் முதலில் அல்லாஹ்வுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். அடுத்து எனக்கு ஆரம்பம் முதல் கடைசி வரை கற்றுத் தந்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இந்தப் பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்கள் விசேடமாக என்னுடைய பெற்றோர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுவதில் சந்தோசம் அடைகின்றேன் என்று அவர் தெரிவித்தார்.
வகுப்பாசிரியர் சரத் பிரேமசிரி கருத்துத் தெரிவிக்கையில் எங்கள் பாடசாலையில் இரு மாணவர்கள் முதலாம் இடங்களைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அகீல் முஹமட் முதலாம் இடத்தையும் மற்றைய மாணவன் நான்காம் இடத்தையும் பெற்று எமது பாடசாலைக்கு புகழை ஈட்டுத் தந்துள்ளார்கள்.
இவர் தந்தை பெயர் பழீல் முஹமட் மிளகு தூய் அரைக்கும ஆலையை நடத்தி வருபவர். தாயார் ஹைருல் வசீரா . இவர் கருத்துத் தெரிவிக்கையில் பாடசாலையை ஒரு போதும் தவறவிட்டதில்லை. இந்தப் பெறுபேறு கிடைத்ததையிட்டு நாங்கள் சந்தோசம் அடைகின்றோம். இவரது பர்ஹத் பஸ்ரீன் இவரது சகோதரியாவர்.
Post a Comment