10 தினங்களுக்குள் 50 பேருக்கு மரண தண்டனை
சவூதி அரேபிய பெண் ஒருவரை கோடாரியால் பல முறை வெட்டிக் கொன்ற எத்தியோப்பிய நாட்டு பெண் ஒருவருக்கு சவூதியில் கழுத்து வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி 2016 ஆம் ஆண்டில் 10 தினங்களுக்குள் சவூதி 50 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது.
குறித்த சவூதிப் பெண் தொழுது கொண்டிருக்கும்போது ஜினாத் பரீத் என்ற அந்த எத்தியோப்பிய நாட்டுப் பெண் அவரை பலமுறை கோடாரியால் வெட்டியிருப்பதாக சவூதி உள்துறை அமைச்சின் செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த பெண்ணை கென்ற பின் இரு தங்க மோதிரங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க அளவு பணத்தையும் எத்தியோப்பிய பெண் களவாடியுள்ளார்.
சவூதியின் மேற்கு நகரான தாயிபில் கடந்த ஞாயிற்றுக்கிழமை எத்தியோப்பிய பெண் மீது மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. சவூதி அரேபியாவில் பெரும் எண்ணிக்கையிலான ஆபிரிக்க நாட்டு வீட்டுப் பணிப்பெண்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த ஜனவரி 2ஆம் திகதி சவூதி அரேபியா தீவிரவாத குற்றச்சாட்டில் 47 பேருக்கு ஒட்டுமொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றியது.
Post a Comment