Header Ads



இலங்கையில் உலகின் மிகச்சிறந்த, இனத்தை உருவாக்குவதே எனது நோக்கம் - மைத்திரி


இலங்கையில் உலகின் மிகச்சிறந்த இனத்தை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நல்லாட்சியின் ஓராண்டு நிறைவை முன்னிட்டு கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று இடம் பெற்ற விழாவின் போது அவர் இதனை தெரிவித்திருந்தார்.

வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும்.

ஜனநாயக அரச நிவாகத்தின் ஓராண்டு பூர்த்தி நிகழ்வு இன்று பிற்பகல் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நீங்கள் காணாத உங்களுக்கு விளங்காதவற்றை தெளிவுபடுத்துவதற்கே நாங்கள் முயற்சிக்கின்றோம்.

கடந்த ஆண்டு தேர்தல் ஆண்டாக இருந்தது. ஜனவரி மாதம் தேர்தல் இடம்பெற்றது. ஆகஸ்ட் மாதம் இடம்பெற்றது.

இவ்வாறு தேர்தல் காலங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடைகள் ஏற்படுவது வழக்கம். அது எமக்கு உட்பிரவேசிக்கும் ஆண்டாகவே இருந்தது.

எதிர்வரும் 5 ஆண்டுகளில் இலங்கையை உலகில் சிறந்த நாடாக மாற்றியமைக்க அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்.

26 வருட கால யுத்தம் நிறைவடைந்ததன் பின்னரான இலங்கையை கட்டியெழுப்ப நாம் செய்திருக்க வேண்டிய விடயங்கள் ​தொடர்பில் நான் கவலைப்படுகின்றேன்.

எங்களுக்கு இருக்கின்ற பிரச்சினைகளை இனங்காண வேண்டும்.

அதற்காக அர்ப்பணிக்க வேண்டும். இந்த நாட்டில் அனைவரும் சகோதரத்துவத்துடன் வாழக்கூடிய சூழலை உருவாக்க வேண்டும்.

இந்த நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் என்ற அனைத்து மக்களினதும் எண்ணிங்கள் எல்லாவற்றையும் ஒரிடத்திற்கு கொண்டு வரவேண்டும்.

படித்தவர்கள், அரசியல் கட்சிகள் என்று அனைத்து தரப்பினரதும் கருத்துக்கள் உள்வாங்கப்பட வேண்டும்.

ஐ.நா. பொது செயலாளர் உட்பட உலக தலைவர்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு எமக்கு இருக்கின்றது.

இந்த நாட்டில் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் வடக்காக இருக்கட்டும், கிழக்காக இருக்கட்டும், தெற்காக இருக்கட்டும் அனைவரும் அமைதியாகவும் சமாதானமாகவும் வாழும் சூழல் ஒன்று உருவாக்கப்பட வேண்டும்.

ஆகவே தேவையான நேரத்தில் தேவையான எந்த தீர்மானங்களையும் எடுப்பதற்கு தான் ஒருபோதும் பின்நிற்கப் போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.