இலங்கையருக்கு சவுதி அரேபிய, அரச குடும்பத்தினரால் உயர் கௌரவம் (படம்)
சவுதியில் அரச குடும்பமொன்று , தமது சாரதியாக நீண்டகாலம் பணியாற்றிய இலங்கையைச் சேர்ந்த ஒருவரை கௌரவித்து பிரியாவிடை நிகழ்வொன்றை நடத்திய உருக்கமான சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த இலங்கையர் , சுமார் 33 வருடங்கள் அக்குடும்பத்தில் சாரதியாக பணியாற்றியுள்ளார்.
இந்நிலையில் 76 வயதான அவர் ஓய்வு பெறுவதை அடுத்து குறித்த அரச குடும்பம் அவரை கௌரவப்படுத்த தீர்மானித்து குறித்த நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது.
இத்தகைய நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படுவது அந்நாட்டில் வழமைக்கு மாறாது என்கின்ற போதிலும் , குறித்த குடும்பம் தமக்காக இவ்வளவு காலமும் பணியாற்றி , குடும்பத்தில் ஒருவர் போன்று இருந்த குறித்த நபருக்காக இந்நிகழ்வை ஏற்பாடு செய்த தாக தெரியவருகின்றது.
இத்தகவலை வெளியிட்டுள்ள சவுதி ஊடகமொன்று , இந்நிகழ்வு ரியாத்தில் உள்ள இளவரசர் அப்துல் ரஹ்மான் பின் பர்ஹான் அல் சவுத்தின் இல்லத்தில் இடம்பெற்றதாகவும் , இதன்போது விதிமுறைகளை தகர்த்து பல அரச குடும்பத்தவர்கள் கலந்துகொண்ட தாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
குறித்த இலங்கையர் தான் ஓய்வு பெற தீர்மானித்த தகவலை குறித்த குடும்பத்தினரிடம் தெரிவித்த போது அவர்கள் மனமுடைந்து போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேபோல் , தனது எஜமானாரால் தான் சிறப்பாக கவனித்துக்கொள்ளப்பட்ட தாக குறித்த இலங்கையர் தெரிவித்துள்ளார்.

Post a Comment