Header Ads



"உலகில் எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்தும், நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை"

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை பாரியளவில் வீழ்ச்சியடைந்தும் அதனை இந்த நாட்டு மக்களுக்கு அனுபவிக்க முடியவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

உலக சந்தையில் மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை நேற்றைய தினம் 30 அமெரிக்க டொலர்களாக இருந்துள்ளதுடன், அது கடந்த 11 ஆண்டுகளுக்கு பின்னர் காணப்பட்ட குறைந்த விலை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 5 மாதங்களில் எண்ணெய் விலை 70% இனால் வீழ்ச்சியடைந்துள்ள போதிலும் மக்களுக்கு எந்தவிதத்திலும் சலுகைகள் வழங்கப்படவில்லை என்று நுகர்வோர் உரிமைகளை பாதுகாப்பதற்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது.

எண்ணெய் விலை சூத்திரம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கான யோசனை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட போதிலும் இதுவரை அதற்கான அனுமதி வழங்கப்படவில்லை.

குறித்த யோசனைக்கு நிதியமைச்சின் பரிந்துரைகளை முன்வைப்பதற்கு ஒரு வார காலம் தேவைப்படும் என்று கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. We can not satisfy in the functions of Consumer Affair Authority

    ReplyDelete
  2. Qatar is king of petrol production even today onward here also petrol price are going up

    ReplyDelete
  3. எந்த அரசு வந்தாலும் ஒயில் மாபியாவை ஒளிக்க முட்யாது நல்லாட்ச்சிக்கு பெயர் சரிகிரது

    ReplyDelete
  4. The crude oil is bought by the government on agreement with oil companies. These are annual agreements and neither party can breach it. Thus if the oil price goes down in the global market, the government can't breach the agreement with the supplier. Thus they have to maintain the agreed price until the expiration of such agreement.

    ReplyDelete

Powered by Blogger.