Header Ads



"முஸ்லிமகளின் மீள்குடியேற்றம், கிழக்கு அபிவிருத்தி" ஹக்கீம் நவாஸ் ஷரீபிடம் வேண்டுகோள்

வட - கிழக்கு வாழ் முஸ்லிமகளின் மீள் குடியேற்றம் கிழக்கு மாகாண அபிவிருத்தி ஆகிவற்றுக்கு பாகிஸ்தானின் ஒத்துழைப்பை வழங்குமாறு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் அவர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

3 நாள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள நவாஸ் ஷரீப் இன்று (6) கண்டி மாநகரின் மஹவலி ரீச் ஹோட்டலில் வைத்து சந்தித்து கலந்துரையாடியபோதே அமைச்சர் ஹக்கீம் மேற்படி வேண்டுகோளை விடுத்துள்ளார்.

இதில் இலங்கை முஸ்லிமகள் தொடர்பான பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

இச்சந்திப்பில் முஸ்லிம் காங்கிரஸ் மட்டகளப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்  செய்யித் அலி ஸாஹிர் மௌலானாவும் கலந்துகொண்டு இருந்தார்கள்.



No comments

Powered by Blogger.