பாதுகாப்பு செயலாளருக்கு எதிராக, தவ்ஹீத் ஜமாத் தொடர்ந்த வழக்கு ஒத்திவைப்பு
கடந்த 08.11..2015 அன்று ஶ்ரீ லங்கா தவ்ஹீத் ஜமாத் நடத்திய சிங்கள மொழி மூலமான அல்-குர்ஆன் வெளியீட்டு நிகழ்வுக்கு இந்தியாவில் இருந்து சிறப்பு பேச்சாளராக வருகை தரவிருந்த பிரபல மார்க்க அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் (PJ) அவர்களின் வருகைக்கு வழங்கப்பட்ட வீஸா அனுமதி இறுதி நேரத்தில் ரத்து செய்யப் பட்டமைக்கு எதிராக தவ்ஹீத் ஜமாத் சார்பில் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சிக்கு எதிராக உயர் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
உயர் நீதி மன்ற நீதிபதி ஶ்ரீ பவன் உள்ளிட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய குழு முன் விசாரனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட இன்றைய விசாரனையில் தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான சாலிய பீரிஸ், ஷிராஸ் நூர்தீன் உள்ளிட்டோருடன் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் மற்றும் ஷாய்நாஸ் ஆகியோர் அடங்கிய குழுவினர் ஆஜராயினர்.
அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் இலங்கை வருகையை தடை செய்யுமாறு குறித்த ஒரு அரசியல்வாதி பொய்யான காரணங்கள் அடங்கிய கோரிக்கைகளை வைத்து ஒப்படைத்த கடிதத்தை அடிப்படையாக வைத்து எவ்வித உரிய காரணமும் இன்றி அறிஞர் பி.ஜெய்னுலாப்தீன் அவர்களின் வருகை தடை செய்யப்பட்டுள்ளது என்பது பற்றிய விபரங்கள் தவ்ஹீத் ஜமாத் தரப்பில் நீதி மன்றத்தில் முன்வைக்கப் பட்டது.
குறித்த பிரச்சினை பற்றிய முழுமையான எந்த விபரமும் தனக்கு வழங்கப்பட வில்லை என்றும், குறித்த பிரச்சினை தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் முழுமையான தகவல்களைப் பெற்ற பின்னர் தான் இது தொடர்பிலான வாதத்தை தன்னால் தொடர முடியும் என்றும் ஆகவே, வழக்கை வேறு ஒரு நாளைக்கு ஒத்தி வைக்குமாறும் அரசு தரப்பு வழக்கறிஞர் வைத்த கோரிக்கைக்கு இணங்க வழக்கு எதிர்வரும் 15.02.2016 ம் திகதிக்கு ஒத்தி வைக்கப் பட்டது.
ஊடகப் பிரிவு – தவ்ஹீத் ஜமாஅத் (SLTJ)

Post a Comment