இனவாதத்தை தூண்டும் ஒரு நோயாளி விமல் வீரவன்ஸ, பேராசிரியர் சரத் விஜேசூரிய எச்சரிக்கை
விமல் வீரவன்ஸ என்பவர் சிறந்த தரத்து வில்லன் எனவும் இரத்தம் கொதிக்கும் வகையில் பேசி இனவாதத்தை தூண்டும் நபர் சிறந்த பேச்சாளர் அல்ல எனவும் இனவாதத்தை தூண்டும் நோயாளி எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
உதகலாவ என்ற சிங்கள நாவல் வெளியிட்டு விழாவில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
ஆரம்பத்தில் இருந்தே விமல் வீரவன்ஸ என்பவர் வில்லன் என்பதே எனது எண்ணம். சிறந்த பேச்சாளர் என்று சமூகத்தில் அவர் பிரபலமானவர். நாட்டு மக்கள் அரசியல் வெற்றிடத்தில் தனிமைப்பட்டுள்ளதன் காரணமாவே வீரவன்ஸவை சிறந்த பேச்சாளராக காண்கின்றனர் என நான் எண்ணுகிறேன்.
சிறந்த பேச்சாளர் என்பவர் எப்போதும் மக்கள் உணர்வுகளை போஷிப்பவராக இருப்பார். சிறந்த பேச்சாளர் என்பவர் பிரபுத்துவ கருத்துக்களை தடைசெய்வராக இருப்பார். இரத்தம் கொதிக்கும் அளவுக்கு பேசி இனவாதத்தை தூண்டும் நபர் சிறந்த பேச்சாளராக இருக்க மாட்டார். அவர் நோயாளி.
விமல் வீரவன்ஸ தனது இருப்புக்காக இனத்தையும் மதத்தையும் பயன்படுத்தும் விதம் ஒழுக்க கேடானது. அவர் போலியான தேசப்பற்றாளர். அவர் வறிய மக்களை பயங்கரவாதிகளாக்கி பகையுணர்வை பரப்பி வருகிறார்.
வாக்கு வங்கியை தற்காத்து கொள்வது மாத்திரமே அவரது நோக்கம். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வீரவன்ஸ அழித்துள்ளார். தனது அசரயில் பாத்திரத்தை வெளிப்படுத்தி வீரவன்ஸ தன்னை முதல்தர வில்லன் என்பதை நன்றாக உறுதிப்படுத்தியுள்ளார். அவருக்கு மாத்திரமல்ல அவரது மனைவிக்கும் போலி ஆவணங்கள் மூலம் கடவுச்சீட்டை பெற்றுக்கொண்டது அனைவருக்கும் தெரிந்த விடயம்.
முடிந்த வரை கடுமையாக விமர்சித்த பிரதமரின் இரண்டு கால்களை நக்கி, போலி கடவுச்சீட்டு விடயத்தில் தப்பித்தார். இந்த விடயத்தில் பிரதமரின் நடவடிக்கை தவறானது. விமல் வீரவன்ஸ கைது செய்யப்படுவதை பிரதமர் தடுத்திருந்தால், அது தவறானது. இப்படியான நடவடிக்கை நல்லாட்சி நோக்கி செல்லும் பயணத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
எந்த சந்தர்ப்பமாக இருந்தாலும் அரசியல்வாதிகள் சட்டத்தில் தலையிடுவதை சட்டத்தை மதிக்கும் மக்கள் எதிர்க்கின்றனர் என்பதை பிரதமர் புரிந்து கொள்ள வேண்டும்.
விமல் வீரவன்ஸ கைது செய்யப்படாமை, திஸ்ஸ அத்தநாயக்க, குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமை, ஹிருணிக்காவின் தாமதமான கைது போன்ற சம்பவங்கள் எமக்கு எதனை எடுத்து காட்டுகிறது?.
மகிந்த ராஜபக்ச அலரி மாளிகையில் இருந்து வெளியேறும் போது விட்டுச் சென்ற இலக்கம் அழிந்து போகாத தொலைபேசி ஒன்று பிரதமரின் மேசையில் இருப்பதை இந்த சம்பவங்கள் எமக்கு எடுத்துக்காட்டுகின்றன எனவும் பேராசிரியர் சரத் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.

Mr Sarath, Do not wait, send him to Angoda hospital immediately.
ReplyDeleteஅவருக்குச் சிகிச்சை அளிக்க நல்லாட்சி இன்னமும் தாமதிப்பது ஏனோ?
ReplyDeleteநல்லாட்சியென்பதன் அர்த்தம் இதுதான் யார் நல்லது செய்தாலும் கெட்டது செய்தாலும் அதுதான் நல்லாட்சியென்ரு பெயர் இது இப்படியே போனால் நல்லாட்சி அரசாங்கம் ஆமையும்-முயலும் ஓட்டபோட்டி வைத்து முடிந்த கதைமாதிரிதான் முடிவு இருக்கும்....
ReplyDelete