சவூதி அரேபியாவின் பொருட்களுக்கு, ஈரானில் தடை
சவூதி அரேபியாவிலிருந்து பொருள்களை இறக்குமதி செய்ய ஈரான் தடை விதித்துள்ளது.
சவூதியில் ஷியா பிரிவு மதத் தலைவர் நிமர் அல்-நிமருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த நாட்டுக்கும், ஈரானுக்கும் இடையிலான பதற்றம் அதிகரித்து வருகிறது.
மரண தண்டனை நிறைவேற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, சவூதி அரேபியத் தூதரகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஈரானுடனான தூதரக உறவை சவூதி அரேபியா துண்டித்துக் கொண்டது. இந்த நிலையில், சவூதி அரேபியாவிலிருந்து பொருள்கள் இறக்குமதி செய்யத் தடை விதிக்கப்படுவதாக ஈரான் அரசுத் தொலைக்காட்சி வியாழக்கிழமை அறிவித்தது.
சவூதி அரேபியாவிலிருந்து ஆண்டுக்கு சுமார் 6 கோடி டாலர் (சுமார் ரூ.400 கோடி) மதிப்பிலான பொருள்களை ஈரான் இறக்குமதி செய்து வருகிறது.
ஜம்ஜம் தண்ணீருக்கும் தடையா?
ReplyDelete