"மைத்திரியை நம்ப முடியாது என, சுதந்திர கட்சியினருக்கு தெரியும்"
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் வேறு கட்சியொன்றில் போட்டியிட எடுத்துள்ள தீர்மானம் மிகவும் நியாயமானது என தூய ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
கடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தோல்வியடைவதாகவும், மஹிந்தவுக்கு பிரதமர் பதவி வழங்குவதில்லையெனவும் அறிவித்ததன் மூலம்,
ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவைப் பெற்றுக் கொடுத்த மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தை நம்ப முடியாது என ஸ்ரீ.ல.சு.க. உள்ளுராட்சி சபை உறுப்பினர்கள் விளங்கியுள்ளனர்.
தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடு குறித்து மக்களின் எதிர்ப்பு அதிகரித்துள்ளது. இதனால், உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற வேண்டுமானால், அரசாங்க எதிர்ப்பு கட்சியொன்றில் மக்களிடம் வாக்குக் கேட்க வேண்டும்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது அன்னம் கூட்டணிக்கு எதிராக கிடைத்த 58 லட்சம் வாக்குகளும் இன்னும் அரசாங்கத்துக்கு எதிராக காணப்படுகின்றன.
62 லட்சம் வாக்குகளை வழங்கி அரசாங்கம் அமைத்த மக்களில் பலர் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களிக்கத் தயாராகவுள்ளதாகவும் உதய கம்மன்பில மேலும் கூறியுள்ளார்.
Who can believe you? You collected money against mahinda from public to get power. Now what are you doing? Pool man
ReplyDelete