மாட்டுக்கறியின் பெயரால் மீண்டும் 'இனவெறி' - ஓடும் ரயிலில் முஸ்லிம்கள் மீது சித்திரவதை
முஹம்மத் ஹுசைன்(43), நசீமா பானு(38), தம்பதியினர் நேற்றுமுன்தினம்(13-01-2016), தெலங்கானா மாநிலம் ஹைதராபாதிலிருந்து, மத்திய பிரதேச மாநிலம் 'ஹர்தா' நோக்கி 'குஷிநகர் எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தனர்.
'ஹர்தா' ரயில் நிலையத்திற்கு மிக சமீபமான, 'கிர்கியா' என்ற ரயில் நிலையத்திலிருந்து 'குஷிநகர் எக்ஸ்பிரஸ்' ரயிலில் ஏறிய வன்முறை கும்பல், தங்களை 'கவுரக்ஷா சமிதி'(பசு பாதுகாப்பு அமைப்பு) என்று சொல்லிக் கொண்டு, மாட்டுக்கறி சோதனை என்ற பெயரில் முஸ்லிம் தம்பதியினரின் 'பேக்' உளிட்ட உடமைகளை சோதனை செய்ய முற்பட்டனர்.
முஸ்லிம் தம்பதியினரின் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக, ஓடும் ரயில் வைத்து முஸ்லிம் குடும்பத்தினரின் உடமைகளை சோதனை செய்த காவி கும்பல், பெண் என்றும் பாராமல் 'நசீமா பானு'வை சித்திரவதை செய்துள்ளனர்.
அதையடுத்து, ரயில்வே போலீஸ், மற்றும், தான் இறங்கவேண்டிய ஊரில் உள்ள தனது உறவினர்களை தொடர்பு கொண்டு முஹம்மத் ஹுசைன் தம்பதியினர் சார்பாக புகார் அளிக்கப்பட்டதையடுத்து, 'ஹர்தா' ரயில் நிலையத்தில் வண்டி நிற்கும்போதே கையும் களவுமாக பிடிபட்டது காவி ரவுடி கும்பல்.
ஹேமந்த் ராஜ்புத், சந்தோஷ் உள்ளிட்ட 9 'பஜ்ரங்தள்' ரவுடிகளை ரயில்வே போலீசார் பிடித்து வழக்கும் பதிவு செய்துவிட்ட நிலையில், 'ஹர்தா' தொகுதி 'பாஜக' எம்.எல்.ஏ. ராம்கிஷோர் டோகி, தலையீட்டின்பேரில், காவி குற்றவாளிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டு, மாலை மரியாதையுடன் காவல் நிலையத்தை விட்டு வெளியேறியுள்ளனர்.

FREEDOM in INDIA... ?
ReplyDeleteஉலகத்தில் காட்டு மிராண்டிகள் அதிகமாக வாழும் நாடு இந்தியாதான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.
ReplyDelete