Header Ads



மூடிய கதவுக்குள் மைத்திரி - பொதுபல சேனா சந்திப்பு, பூரண வெற்றி என்கிறார் ஞானசாரா

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்திய சந்திப்பு வெற்றியளித்துள்ளதாக பொதுபல சேனா இயக்கத்தின் பொதுச் செயலாளர் கலபொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கும் பொதுபல சேனா இயக்கத்திற்கும் இடையில் நேற்றைய தினம் மாலை மூடிய கதவு பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளன.

பல்வேறு விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

உலக இஸ்லாமிய தீவிரவாதம் காரணமாக இலங்கை வாழ் பௌத்தர்களும் முஸ்லிம்களும் எதிர்நோக்கக்கூடிய அபாயங்கள் குறித்து ஜனாதிபதிக்கு தெளிவுபடுத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

வவுனியா போகஸ்வௌ பிரதேசத்தின் பின்தங்கிய கிராமங்களில் கடந்த அரசாங்கத்தினால் குடியேற்றப்பட்ட 4500 குடும்பங்கள் தற்போது, தமது பழைய இடங்களுக்கு திரும்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் அமைச்சர்கள் மற்றும் தமிழ் பிரிவினைவாதிகளின் அழுத்தம் காரணமாக இவ்வாறு குடியேற்றப்பட்டவர்கள் மீளவும் பழைய இடங்களுக்கு திரும்பி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து ஜனாதிபதி காத்திரமான தீர்வு ஒன்றை வழங்குவார் என எதிர்பார்ப்பதாக ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.

3 comments:

  1. ஆன முட்டையில் அடி முட்டை வேறு நுணி முட்டை வேறா என்றொரு பழமொழி உண்டு

    ReplyDelete
  2. எந்த இடத்துக்கு உள்ளே போய் வெலியே வந்தாலும் சேனாக்கள் வெற்றீயென்ருதான் சொல்லமுற்படுவார்கள் காரனம் கடுப்பேற்றீ பேசுவதுதான் அவர்கள் தொழிலாச்சே

    ReplyDelete
  3. வெற்றிப் பேச்சுவார்த்தையா அன்றேல் வெட்டிப் பேச்சுவார்த்தையா என்பது பின்னர் தெரிய வரும்!

    ReplyDelete

Powered by Blogger.