பைசால் காசீம் அதிரடி - கிழக்கு மாகாண மாவட்டங்களில் விரைவில் “ஒசுசல”
-மு.இ.உமர் அலி-
பிரதி சுகாதார அமைச்சர் பைசால் காசீம் அவர்களது வேண்டுகோளுக்கு இணங்க அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் உற்பத்திகளை விற்பனை செய்யும் நிறுவனமான “ஒசுசல” வினை ஆரம்பிப்பதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் முன்னேடுக்கப்பட்டுவிட்டன.
அதனடிப்படையில் அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் சந்தைப்படுத்துதல் பிரிவின் முகாமையாளர் திரு ரோகன குருப்புமுல்லகே, அந்நிறுவனத்தின் விற்பனை முகாமையாளர் பிரான்சிஸ் ஆகியோர் ,இரு மாவட்டங்களுக்கும் நேற்று சனிக்கிழமை (10.01.2016) விஜயம் செய்திருந்தனர்.
இக்குழுவினர் ஒசுசல அமைப்பதற்கான வசதிகளை உள்ளடங்கியதும் விற்பனை நடைபெறுவதற்கும், மக்களால் இலகுவாக வந்து செல்லககூடியதுமான பல இடங்களை பார்வையிட்டுச் சென்றுள்ளனர்.
குறித்த அதிகாரிகள் கருத்து தெரிவிக்கையில்,
பொத்துவில் அக்கரைப்பற்று, நிந்தவூர், கல்முனை,சம்மாந்துறை, மட்டக்களப்பு போன்ற பிரதேசங்களில் தாம் பார்வையிட்ட இடங்கள் மிகவும் பொருத்தமான இடங்களாக இருப்பதாகவும் இவற்றினை கொழும்பில் ஒப்பிட்டுப்பார்த்து அலுவலக பரிசீலனை செய்த பின்னர் எங்கு அமைப்பது இறுதியாக முடிவாகும் என்று கூறினார். அத்துடன் இந்தப் பிராந்தியங்களில் ஒசுசல நிறுவனங்கள் விரைவில் அமைக்கப்படவேண்டும்,அதனூடாக ஏழைப்பொதுமக்கள் பிரயோசனம் அடைய வேண்டும் என பிரதியமைச்சர் அவர்கள் விரும்புவதாகவும் கூறினர்.
I appreciate this effort. Because here lots of pharmacies are selling drugs in high rate
ReplyDelete