Header Ads



குழந்தை பிறந்தால், தந்தையின் விடுமுறையை அதிகரிக்க கோரிக்கை

பிறக்கும் சிசுவின் தந்தைக்காக வழங்கப்படும் விடுமுறையுடன் தொடர்புடைய சட்டத்தை திருத்துமாறு, தேசிய சிறுவர் பாதுகாப்பு சேவைகள் அதிகார சபையின் தலைவர் டொக்டர் நடாஷா பாலேந்திரா, அரசாங்கத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளார். 

பிறக்கும் சிசுவினுடைய தந்தைக்கு, பொதுவாக மூன்று நாட்கள் விடுமுறையே வழங்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

'இந்த விடுமுறையை அதிகரிப்பதன் மூலம், குழந்தைகளுடன் தந்தைமார் செலவிடும் காலத்தையும் அதிகரிக்க முடியும்.

இதனால், தந்தை மற்றும் பிள்ளைகளுக்கு இடையிலான உறவு உறுதியாக அமையும்' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

'பிள்ளைகள் மீதான தந்தைமாரின் அக்கறையையும் பொறுப்பையும் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கிலேயே இது தொடர்பான கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன' என்றும் அவர் கூறியுள்ளார்.

2 comments:

  1. இலங்கையில் இருக்கின்ற leave கள் பத்தாதா?

    ReplyDelete

Powered by Blogger.