Header Ads



இஸ்ரேல் நலன்காப்பு பிரிவிற்கெதிராக, கிழக்கு மாகாண சபையில் பிரேரணை நிறைவேற்றம்

-ரபாய்டீன் பாபு ஏ .லத்தீப்-

 மாகாணசபை உறுப்பினர் ஆரிப் சம்சுதீன்  அவர்களினால்  இலங்கையில் இஸ்ரேல் நலன் காப்பு  பிரிவு அமைப்பதுக்கு எதிராக தனி நபர் பிரேரணையை  சமர்ப்பிபிக்கப்பட்டது  இன்றைய  சபை நிகழ்வில் தடுப்புக்காவலில்  வைக்கப்பட்டுள்ள  சிவநேசதுரை சந்திரகாந்தன் கலந்து கொண்டார். என்பது  குறிப்பிடத்தக்கது .பாதுகாப்பு வழமையை விட அதிகரிக்கப்பட்டிநதது .        

கிழக்கு மாகான சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் சந்திரதாச கலப்பதி தலைமையில் திருகோணமலை பேரவை செயலகத்தில் இன்று காலை நடைபெற்றது. 

இதன்போது   முஸ்லிம்களுக்கெதிராக  செயல்படும்                                                                  பிரித்தாளும்  கொள்கையுடன் மனிதகுலத்திக்கெதிராக  சர்வதேச  ரீதியில்  குழப்பத்தை ஏற்படுத்தி  அதன் ஊடாக தனது வாழ்வாதாரத்தை  நடத்திக் கொண்டிருக்கின்ற இஸ்ரேல் கடந்த  யுத்த காத்தில் இலங்கையில் இரு தரப்பினரயும்  மோதவிட்டு பல ஆயிரக்கணக்கான உயிர்களை அழி த்தவர்கள் .அது மாத்திரமலாமல்  1967 ஆம் ஆண்டு பலஸ்த்தீனத்தை  ஆக்கிரமித்து  யுத்தத்தை  ஆரம்பித்து பலாயிரக்கனக்கான  உயிர்களை கொன்று குவித்து அகதிகலாக்கிய  சர்வதேச போர் குற்றவாளிகள்  இஸ்ரவேலர்களுடைய ஆதிக்கம்  இந்த நாட்டுக்குள்  அனுமதிப்பதானது இலங்கை  தற்கொலை செய்வதற்கு சமனானது  எனவே .இந்த நாடு அமெரிக்காவினதும் இஸ்ரேவேலர்களுடைய  பின்னனியினால்   பலகூறுகளாக  பிரிந்து விடுமோ என அஞ்சவேண்டியுள்ளது . 

சிங்கள சகோதரர்கள் மிக நேர்மையானவர்கள்  அவர்கள்  எம்மோடு  இணைந்து இந்தப்  பிரேரணையை  சகல உறுப்பினர்களும் ஆதரித்து ஜனாபதி.பிரதமர்.ஐ .நா .சபை  செயலாளர்   தவிசாளர் கடிதம் அனுப்பவேண்டுமென இதன்போது விவாதிக்கப்பட்டது . உறுப்பினர்களான ஆரிப் சம்சுதீன்  உதுமா லெப்பை  ஜே.எம். லாஹீர்  தவம்  இனிய பாரதி  ஆகியோர்  பிரேரணை ஆதரித்துப் பேசினர்

1 comment:

  1. முக்கியமான சபையான பாராளுமன்றத்தில் மானிய அடிப்படையில் சாப்பிட்டு தூங்கிட்டு வரும் நம் சமுதாய தம்பி சொறி எம்பிமாருக்கு இன்னும் இதன் விளைவு விளங்கவில்லையா அல்லது ஜனாதிபதியும் பிரதமரும் பக்கத்தில் இருப்பதால் ஒன்றும் பேசமுடியாமல் வாய் அடைத்ப்போய் உள்ளார்களா?அப்படி தப்பித்தவறி பேசினாலும் ரிஷாத் பதுர்தீன் பேசுவார்.அகதிக்கித்தான் ஒரு அகதியின் நிலைமை புரியும்.

    ReplyDelete

Powered by Blogger.