Header Ads



"மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்"

மாடுகளை அறுப்பதற்கு தடை விதிக்கபோவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது குறிப்பிட்டிருந்தமை முஸ்லிகள் மீதான அடிப்படை உரிமை மீறல் என முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

குறித்த விடயம் தொடர்பில் Viக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மாடுகளை அறுப்பதற்கு தாம் தடை விதிக்கப்போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றின் போது குறிப்பிட்டிருந்தார் இந்த விடயம் முஸ்லிகள் மீதான அடிப்படை உரிமை மீறல் என்ற கோணத்தில் பார்க்கப்பட வேண்டும்.

எனவே இது குறித்து ஜனாதிபதிக்கு முற்று முழுவதுமாக விளக்கி சொல்வதற்கு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைமையின் கீழ் முஸ்லிம் அமைப்புகள் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கையை காலம் தாழ்த்தாமல் எடுக்க வேண்டும்.

கடந்த அரசாங்கம் செய்தவையெல்லாம் முஸ்லிம்களுக்கு எதிரான செயல் என்றால், தற்போதைய அரசாங்கமும் அதனையே செய்கின்றது.இதனால் மாமியார் உடைத்தால் மண் குடம் மருமகள் உடைத்தால் பொன்குடம் என்பது போலாகிவிட்டது இந்நாட்டு முஸ்லிமகளின் நிலமை.

இந்த நிலை நீடிக்காதிருக்க அதற்கான உடனடி நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்றார்.

9 comments:

  1. Aiyyaa.....Ungal karutthai varavetkirean....but pls do not call ACJU...pls.....

    ReplyDelete
  2. தூங்குமுன் 100 மஹிந்த என்று சொல்லி படுங்க நாங்கள் அப்பன் வெட்டிய கினரு என்றாலூம் உப்பு தண்ணீர் என்றால் உப்புனுசொல்வோம் நீர்

    ReplyDelete
  3. கடந்த அரசாங்கம் செய்ததெல்லாம் முஸ்லிம்களுக்கு பிழை என்பதை ஒப்புக்கொல்கிண்றீர்கலள்தானே, அப்படி என்றால் ஏன் இன்னும் பாவிகளுக்காக கடைபோகிண்றீர்கள் என்பதுதான் எனக்குப் புரியவில்லை.

    ReplyDelete
  4. சாச்சாக்கு நினைவு இருக்கா கடந்த ஆட்சிக்காலத்தில் முஸ்லிம் நாட்டு துதுவர்கள் மகிந்தவை சந்திந்து முஸ்லிகளின் பிரச்சினை பற்றிப்பேசும்போது நீங்கள் குறுக்கிட்டு இங்கு முஸ்லிம்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லை என்று சொன்னது வாயை மூடும்படி பலஸ்தீன் தூதுவர் சொன்னது நீங்கள் மறந்து இருப்பீர்கள் ஏன் என்றால் உங்களுக்கு தான் ரோசம் என்று ஓன்று இல்லையே ஆனால் நாங்கள் மறக்க மாட்டோம்.எங்களுக்கு ரோசம் இருக்கு அதுக்கும் காரணம் நீங்கள்தான்,நன்றி

    ReplyDelete
  5. my3 ஒரு கருத்தை சொன்னார்.அது நடைமுறைச் சாத்திய மற்றது என்று அவருக்கே தெரியும்.அப்படியே சட்டமாக்கப் பட்டாலும் பாதிப்பு பெரும்பான்மை இணத்திற்கே உ+ம் 50000/= விற்கும் ஒரு மாடு 5000/=திற்கும் வாங்க ஆளில்லாமல் பண்ணைத் தொழில் செய்பவர்கள் பெரும் நெருக்கடிக்குள்ளாவார்கள்.ஆக பண்ணைத் தொழிளாலர்களே இச் சட்டத்தை எதிர்க்க வேண்டும்.முஸ்லீங்கள் மாடுதான் சாப்பிடவேண்டும் என்று இஸ்லாம் கட்டளையிட வில்லை.அது மார்க்க கடமையுமில்லை. ஹலால் உணவு,பள்ளி வாசல் உடைப்பு,பர்தா கிழிப்பு,முஸ்லீங்களின் பொருளாதாரம்,வியாபாரம்,வீடுகள்,கல்வி,வேலைவாய்ப்பு,இப்படி சகல வழிகளிலும் இஸ்லாமியர்கள் பழி தீர்க்கப்பட்ட போது கைகட்டி வாய் பொத்தி ஊமையாக இருந்தவர்.இன்று இப்படிக் கிளம்புகிறார் என்றால்,அது முஸ்லீங்கள் மீதுள்ள அக்கறையிலில்லை அவர் தினமும் ஜெபிக்கும் மஹிந்த நாமம் மீண்டும் இலங்கையில் ஒலிக்க வேண்டும் என்ற அக்கறையில்தான்.

    ReplyDelete
  6. மஹிந்த உடைத்தார் வெரும்குடம் அஸ்வர்மாமா உடைத்தார் விசக்குடம் எப்போ மஹிந்தவீழ்ந்தாரோ அன்ருமுஸ்லீம்கள் மீதுமாமாவிற்கும் ஒருவிதமான கோபம் இருக்கதான் செய்தது அதன் வெலிப்பாடாகவே முஸ்லீம்கள் மீதான எந்தகருத்துக்கள் முன்வைக்கும் போதும் துள்ளீகுதித்து தூக்கிப்பிடித்து பார்த்தீர்களா?இப்போவென்ரு முஸ்லீம்கலையே பார்த்து கவிபாடுகின்ரார் இது முற்ருமுலுதாக பாட்னர் தோக்கடிக்கபட்ட ஆதங்கமே தவிர இனத்துக்கான பாசபோராட்டமே கிடையாது....

    ReplyDelete
  7. So You have got a new platform. Do you think the Muslims will come behind and dance to your tune. If the President feels its better to ban Slaughter of Cows its OK. but YOU going to make the Muslims scapegoats for your political aim is impossible.

    ReplyDelete
  8. வயசுபோனா அப்படிதான்!
    தான்பேசுறது தனக்கே புரியாது...!?

    ReplyDelete
  9. Mr Azwer , how old will you be in five years ? Why don't you
    retire from politics and learn some gymnastics to live longer
    for your grand children ?

    ReplyDelete

Powered by Blogger.